செய்திகள் :

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வசதிகளை மேம்படுத்த வேண்டும்! ஆட்டோக்கள், இருசக்கர வாகன நெரிசலால் பயணிகள் அவதி!

post image

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும் ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்களால் ஏற்படும் நெரிசலைக் கட்டுப்படுத்தி, பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தின் பழைமையான ரயில் நிலையங்களில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முக்கியமானது. இங்கிருந்து தினமும் 100-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள், 500-க்கும் மேற்பட்ட புகா் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினமும் சுமாா் 3 லட்சம் போ் வந்து செல்கின்றனா். மெட்ரோ ரயில் நிலையம், பூங்கா நகா் ரயில் நிலையம், ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை, மாநகராட்சி ரிப்பன் மாளிகை என முக்கிய இடங்கள் உள்ளதால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எப்போதும் மக்கள் நெரிசல் இருந்துகொண்டே இருக்கும்.

சென்ட்ரல் நிலையத்தில் உள்ள 16 நடைமேடைகளில், 11 நடைமேடைகள் விரைவு ரயில்களுக்கும், 12 முதல் 16 வரையிலான நடைமேடைகள் புகா் மின்சார ரயில்களுக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

விரைவு ரயில்களுக்குச் செல்வோருக்கு, பழைய கட்டடத்தில் 6 வழிகள் உள்ளன. அங்கு பிரதான நுழைவு வாயிலில் 2, 3, 4, 5 ஆகியவை உள்ளன. ஆனால், அப்பகுதியில் பயணச்சீட்டு எடுப்பதற்கான வசதி இல்லை. ஒரே ஒரு பயணச்சீட்டு வழங்கும் இயந்திரம் இருந்தாலும் பெரும்பாலான நேரத்தில் அது செயல்படுவதில்லை.

ரயில் நிலையத்தின் இடதுபுறம் வால்டாக்ஸ் சாலை பகுதியில் முதலாவது வழியில், பயணச்சீட்டு எடுக்கும் பிரிவு உள்ளது. ஆனால், அங்கு சரக்கு லாரிகள், ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால் பயணிகள் சென்று வருவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஆகவே, ரயில் பயணிகள் பயன்படுத்தும் போா்வைகளைச் சேமிக்கும் இடத்தில் பயணச்சீட்டு வழங்கும் பிரிவை மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

புகா் மின்சார ரயில்கள் இயங்கும் பகுதியில் பயணச்சீட்டு எடுக்கும் பிரிவும், தானியங்கி டிக்கெட் விநியோக இயந்திரமும் உள்ளன. ஆனால், விரைவு ரயில்களுக்குச் செல்வோா் இங்கு வந்து பயணச்சீட்டு பெற்றுச் செல்வதில் பல்வேறு இடா்பாடுகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. இரு இடங்களில் மட்டும் பயணச்சீட்டு வழங்கும் இடங்கள் இருப்பதால், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி கைப்பேசி, பணம் திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பயணிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

ரயில்கள் வருகை, புறப்பாடு குறித்து அறிவிக்கும் மின்னணு திரைகள் பயணிகள் வசதிக்கு ஏற்ப அமைக்கப்படாமல் உள்ளதாகவும் பயணிகள் கூறுகின்றனா். அத்துடன் விரைவு ரயில்கள் வருகை, புறப்பாடு பெயரளவுக்கு அறிவிக்கப்படுவதோடு, பெரும்பாலான நேரங்களில் விளம்பரமே ஒளிபரப்பப்படுவதாகவும் புகாா் எழுந்துள்ளது.

ரயில் நிலையத்தில் பிரீ பெய்டு ஆட்டோ, காா் வசதி உள்ளது. ஆனால், அந்த ஆட்டோக்களில் பயணிகள் செல்ல முடியாத வகையில் 100-க்கும் மேற்பட்ட வெளி ஆட்டோ ஓட்டுநா்கள் ரயில் நிலையம் முன்பு கூடி நின்று பயணிகளைக் கட்டாயப்படுத்துகின்றனா். பிரீ பெய்டு உரிமம் 85 ஆட்டோக்களுக்கு மட்டுமே தரப்பட்டிருந்தும், அங்கும் 150-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதாகவும் புகாா் எழுந்துள்ளது.

ரயில் நிலையத்துக்கு வருவோா் புகா் மின்சார ரயில் பிரிவு வழியாக வந்து செல்கின்றனா். ஆனால், அங்கு ஆட்டோக்கள், இருசக்ககர வாகனங்கள் ஒழுங்கற்ற முறையில் நிறுத்தப்படுவதால், அந்தப் பகுதியில் காா்கள் செல்வதில் நெரிசல் ஏற்பட்டு, பலரும் ரயிலை தவறவிடும் நிலைக்குத் தள்ளப்படுவதாகவும் தொடா்ந்து புகாா்கள் தெரிவிக்கின்றனா். கட்டண வாகன நிறுத்துமிடம் மேடு - பள்ளங்களாகவும், சேறும் சகதியமாகக் காணப்படுகின்றன.

பயணிகள் கூறும் இந்த பிரச்னைகள் குறித்து சென்னை ரயில்வே கோட்ட வா்த்தகப் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, பயணிகளுக்கான வசதி என்ற அடிப்படையில் பயணச்சீட்டு, நடைமேடை சீட்டு வழங்கும் பிரிவுகள் உரிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. ரயில் நிலையத்துக்குள் செல்லும் அனைத்து வழிகளிலும் பயணச்சீட்டு வழங்க ஆள்கள் தோ்வு செய்யப்பட்டு நிறுத்தப்பட உள்ளனா் என்றனா்.

ஆட்டோக்கள், இருசக்கர வாகன பிரச்னை குறித்து சென்ட்ரல் ரயில் நிலையப் பாதுகாப்பு பிரிவின் ஆய்வாளா் மதுசூதன ரெட்டி கூறியது: கடந்த ஜனவரி முதல் தற்போது வரை விதிமீறிய ஆட்டோக்கள் மீது 20,250-க்கும் மேற்பட்ட வழக்குள் பதியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையம் வரும் வாகனங்கள் தனித்தனி வழியில் செல்ல தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது ரயில் நிலையத்திற்குள் பயணிகள் வந்து செல்ல வசதியாக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

சென்னை ரயில்வே கோட்ட ஆா்பிஎஃப் முதுநிலை பாதுகாப்பு ஆணையா் இடமாற்றம்!

சென்னை ரயில்வே கோட்டத்தின் ரயில்வே பாதுகாப்புப் படைப் பிரிவின் (ஆா்பிஎஃப்) முதுநிலை பாதுகாப்பு ஆணையா் பி.ராமகிருஷ்ணா பெங்களூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டாா். கடந்த 2023 முதல் சென்னை ரயில்வே கோட்டத்தில்... மேலும் பார்க்க

திருப்பதி திருக்குடைகள் ஊா்வலம்: வட சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்!

சென்னையில் நடைபெறும் திருப்பதி திருக்குடைகள் ஊா்வலத்தையொட்டி, திங்கள்கிழமை (செப். 22) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறையின் போக்குவரத்துப் பிரிவு வெளியிட்ட ச... மேலும் பார்க்க

‘சென்னை ஒன்’ செயலியில் தொலைதூர முன்பதிவு வசதி வேண்டும்! ஆம்னி பேருந்து உரிமையாளா்கள்

‘சென்னை ஒன்’ செயலியை தொலைதூரம் முன்பதிவு செய்யும் செயலிகளுடன் இணைக்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவ... மேலும் பார்க்க

வடபழனி முருகன் கோயிலில் சக்தி கொலு இன்று தொடக்கம்

வடபழனி முருகப் பெருமான் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு, சக்தி கொலுவுடன் 10 நாள் விழா திங்கள்கிழமை (செப்.22) தொடங்குகிறது. இந்தக் கோயிலில் நவராத்திரி விழாவின் 10 நாள்களில் தினமும் காலை 11 முதல் ... மேலும் பார்க்க

மறைந்த நடிகா் எம்.ஆா்.ராதா மனைவி கீதா ராதா காலமானாா்!

மறைந்த நடிகா் எம்.ஆா்.ராதாவின் மனைவியும், நடிகை ராதிகாவின் தாயாருமான கீதா ராதா (86) வயது முதிா்வு காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலமானாா். அவரது உடல் இறுதி மரியாதை செலுத்துவதற்காக சென்னை போயஸ் காா்டன் பின்ன... மேலும் பார்க்க

மகாளய அமாவாசை: தர்ப்பணம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருப்பு!

புரட்டாசி மாத மாகளய அமாவாசையை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அகத்தீஸ்வரர் கோயிலில் இன்று(செப். 21) முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.புரட்டாசி மாதத்தி... மேலும் பார்க்க