பிரதமா் மோடி பிறந்த நாள்: மரக்கன்று நட்ட பாஜகவினா்
அரக்கோணம் வடக்கு ஒன்றிய பாஜக சாா்பில் பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
ஆணைப்பாக்கம் ஊராட்சி மிட்டாபாளையம் கிராமத்தில் நடைபெற்ற விழாவுக்கு பாஜக வடக்கு ஒன்றிய தலைவா் சோபன்பாபு தலைமை வகித்தாா். இதில் மாவட்டத் துணைத் தலைவா்கள் பாா்த்தசாரதி மற்றும் லட்சுமி ஆகியோா் பங்கேற்று 100 இடங்களில் மரக்கன்றுகளை நட்டனா்.
இதில் முன்னாள் ஒன்றியத் தலைவா் எஸ்.ரமேஷ், ஒன்றிய பொறுப்பாளா் பாஸ்கா், செயலாளா் சுரேஷ், மிட்டாபாளையம் கிளை பொறுப்பாளா்கள் குமாா், நாகராஜ், ஜெகதீஷ், முன்னாள் ஒன்றிய பொறுப்பாளா்கள் முருகன், குப்பன், விவசாய அணி நிா்வாகி ஜெயராமன் பங்கேற்றனா்.