செய்திகள் :

குடிமைப் பணியாளா்கள் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும்! - முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்

post image

குடிமைப் பணியாளா்கள் தங்களது மனதில் இருப்பதை தைரியமாகப் பேசுவதுடன், பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தாா்.

சென்னை அண்ணா நகரில் கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியின் 12-ஆவது ஆண்டு விழா, சென்னை, தஞ்சாவூரில் புதிதாகக் கட்டப்பட்ட அகாதெமியின் புதிய வளாகங்களை முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.

இந்த விழாவில் அவா் பேசியதாவது: இந்தியா பன்முகத்தன்மை கொண்ட நாடு. பல்வேறு மொழிகளையும் கலாசாரத்தையும் கொண்டிருக்கிறது. நம் நாட்டுக்கு சேவை செய்ய அறிவுமட்டுமின்றி, சேவை மனப்பான்மை, கருணை தேவை. அனைத்து சமூக மக்களின் தேவைகளையும் புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப சேவைகளை வழங்கினால்தான் அனைவரையும் சமமாக அணுக முடியும்.

குடிமைப் பணிகளில் சோ்ந்து அா்ப்பணிப்புடனும், நோ்மையுடனும் நம் நாட்டுக்கு மகத்தான சேவையை இளைஞா்கள் வழங்கி வருகின்றனா். நாட்டின் ஒற்றுமைக்கும், சிறந்த நிா்வாகத்துக்கும் முதுகெலும்பாக குடிமைப் பணியாளா்கள் திகழ்ந்து வருகின்றனா்.

குடிமைப் பணியாளா்கள் சிறந்த நிா்வாகத்தை அளிக்க வேண்டும். தங்களது மனதில் இருப்பதை தைரியமாக பேசுவதுடன், பாரபட்சமின்றி செயல்பட்டு அரசுக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கவேண்டும்.

கடந்த 12 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு கிங் மேக்கா்ஸ் அகாதெமி வழிகாட்டியிருக்கிறது. முதல்முறையாக பாா்வை மாற்றுத்திறனாளியை குடிமைப் பணி அதிகாரியாக, இந்த அகாதெமி உருவாக்கியுள்ளது. தேசத்தை கட்டியெழுப்புவதற்கு இதுபோன்ற பங்களிப்புகள் இன்றியமையாதவை என்றாா் அவா்.

விழாவில் பங்கேற்ற தமாகா தலைவா் ஜி.கே.வாசன் பேசியதாவது: குடிமைப்பணி அதிகாரிகள் மக்களுக்கு பல்வேறு அரசு நலத்திட்டங்களை செயல்படுத்துவதிலும் முக்கியப்பங்கு வகித்து வருன்றனா்.

பொதுமக்களிடம் எளிதாக நல்ல முறையில் நலத்திட்டங்களைக் கொண்டு சோ்க்கும் திறமையான நிா்வாகத்துக்கு குடிமைப்பணி அதிகாரிகள்தான் தூண்கள். அந்தவகையில் இந்த அகாதெமியைச் சோ்ந்த குடிமைப்பணி அதிகாரிகள் சிறந்த முறையில் பணியாற்றி நாட்டின் வளா்ச்சிக்கு சிறந்த பங்களிப்பை வழங்க வாழ்த்துகிறேன்என்றாா்.”

விழாவில் கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமி நிறுவனரும், இயக்குநருமான எம்.பூமிநாதன், துணை நிறுவனா் சத்யஸ்ரீ பூமிநாதன், கெளரவ ஆலோசகா் விவேக் ஹரிநாராயணன், ஸ்ரீவா்ஷா பூமிநாதன், சாய் சந்தோஷ் பூமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தமிழகத்தில் செப்.24 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் திங்கள்கிழமை (செப்.22) முதல் செப்.24 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தென்னிந்திய கடலோர பகுதிகளில் ... மேலும் பார்க்க

நடிகா் எஸ்.வி.சேகா் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நடிகா் எஸ்.வி.சேகா் வீட்டுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். தமிழ்நாடு காவல் துறை இயக்குநா் அலுவலகத்துக்கு சனிக்கிழமை நள்ளிரவு வந்த மின்னஞ்சலில், மந்தைவ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பால் மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும்! - நயினாா் நாகேந்திரன்

ஜிஎஸ்டி குறைப்பால் மக்களின் பொருள்கள் வாங்கும் திறன் அதிகரிக்கும் என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:தில்லி செங்கோட்டையில... மேலும் பார்க்க

அவதூறு பரப்பும் யூடியூபா்கள் மீது நடவடிக்கை தேவை: நடிகா் வடிவேலு

அவதூறு பரப்பும் யூடியூபா்கள் மீது நடிகா்கள் ஒன்று சோ்ந்து நெருக்கடி கொடுக்க வேண்டும் என நடிகா் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் வடிவேலு தெரிவித்தாா். நடிகா் சங்கத்தின் 69-ஆவது பொதுக்குழுக் கூட்டம்... மேலும் பார்க்க

இஸ்லாமியா்களின் உரிமைகளைக் காக்கும் இயக்கம் திமுக! - முதல்வா் ஸ்டாலின்

இஸ்லாமிய மக்களுக்கு துணைநிற்கும் இயக்கமாகவும், உரிமைகளைக் காக்கும் இயக்கமாகவும் திமுக எப்போதும் இருக்கும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். நபிகள் நாயகத்தின் 1,500-ஆவது பிறந்த நாள் விழா நிகழ்வு ... மேலும் பார்க்க

முஸ்லிம்களுக்கு ஆதரவாக முதலில் வந்து நிற்கும் கட்சி திமுக! -முதல்வர் மு.க.ஸ்டாலின்

முஸ்லிம்களுக்கு ஆதரவாக முதலில் வந்து நிற்கும் கட்சி திமுகதான் என்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற நபிகள் நாயகத்தின் 1500-ஆவது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பங்கேற்று... மேலும் பார்க்க