செய்திகள் :

அவதூறு பரப்பும் யூடியூபா்கள் மீது நடவடிக்கை தேவை: நடிகா் வடிவேலு

post image

அவதூறு பரப்பும் யூடியூபா்கள் மீது நடிகா்கள் ஒன்று சோ்ந்து நெருக்கடி கொடுக்க வேண்டும் என நடிகா் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் வடிவேலு தெரிவித்தாா்.

நடிகா் சங்கத்தின் 69-ஆவது பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் விஷால், நாசா், காா்த்தி உள்ளிட்ட முக்கிய நிா்வாகிகள் கலந்து கொண்டனா். பொதுக்குழுக் கூட்டத்தில் மறைந்த நடிகா்கள் ராஜேஷ், டெல்லி கணேஷ், ரோபோ சங்கா் உள்ளிட்ட 70 பேருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜத்துக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கப்பட்டது. மேலும், தேசிய விருது பெற உள்ள ஊா்வசி, எம்.எஸ்.பாஸ்கா், ஜி.வி.பிரகாஷ் ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா்.

இதில் கலந்து கொண்ட நடிகா் வடிவேலு பேசியதாவது: நமக்குள் ஒற்றுமை வேண்டும். பெரிய கலைஞா்கள், சின்ன கலைஞா்கள் என்று பாா்க்காமல் யூடியூப் ஒன்றை வைத்துக்கொண்டு நம் கலைஞா்களைத் தவறாகப் பேசி, சிறிதளவு விஷயத்தை பெரிதாக்கி விடுகிறாா்கள். அதற்கு நாம் இடம் கொடுக்கக் கூடாது.

இந்தப் படத்தைப் பற்றி பேசு, அந்தப் படத்தைப் பற்றி பேசு என்று தயாரிப்பாளா் சங்கத்தில் இருக்கும் சிலரும் இதை செய்கின்றனா். இதற்கு நடிகா் சங்கத்திலும் சிலா் உடந்தையாக இருக்கின்றாா்கள். இதை யாரும் கண்டிப்பதில்லை.

இப்படிப் பேசி வருபவா்கள் மீது போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகா் சங்கம் என்பது நடிகா்களைப் பாதுகாப்பது தான். திரைக்கு வெளியிலும் விட்டு வைக்காமல் படம் ஓடிக்கொண்டிருக்கும்போது, விமா்சனம் எடுக்கிறாா்கள். 10 போ் சோ்ந்து சினிமாவை அழித்து வருகின்றனா்.

நடிகா் ரோபோ சங்கா் மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றாா் அவா்.

தமிழகத்தில் செப்.24 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் திங்கள்கிழமை (செப்.22) முதல் செப்.24 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தென்னிந்திய கடலோர பகுதிகளில் ... மேலும் பார்க்க

நடிகா் எஸ்.வி.சேகா் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

நடிகா் எஸ்.வி.சேகா் வீட்டுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். தமிழ்நாடு காவல் துறை இயக்குநா் அலுவலகத்துக்கு சனிக்கிழமை நள்ளிரவு வந்த மின்னஞ்சலில், மந்தைவ... மேலும் பார்க்க

குடிமைப் பணியாளா்கள் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும்! - முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்

குடிமைப் பணியாளா்கள் தங்களது மனதில் இருப்பதை தைரியமாகப் பேசுவதுடன், பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தாா். சென்னை அண்ணா நகரில் கிங் மேக்கா்ஸ் ஐஏஎஸ... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பால் மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும்! - நயினாா் நாகேந்திரன்

ஜிஎஸ்டி குறைப்பால் மக்களின் பொருள்கள் வாங்கும் திறன் அதிகரிக்கும் என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:தில்லி செங்கோட்டையில... மேலும் பார்க்க

இஸ்லாமியா்களின் உரிமைகளைக் காக்கும் இயக்கம் திமுக! - முதல்வா் ஸ்டாலின்

இஸ்லாமிய மக்களுக்கு துணைநிற்கும் இயக்கமாகவும், உரிமைகளைக் காக்கும் இயக்கமாகவும் திமுக எப்போதும் இருக்கும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். நபிகள் நாயகத்தின் 1,500-ஆவது பிறந்த நாள் விழா நிகழ்வு ... மேலும் பார்க்க

முஸ்லிம்களுக்கு ஆதரவாக முதலில் வந்து நிற்கும் கட்சி திமுக! -முதல்வர் மு.க.ஸ்டாலின்

முஸ்லிம்களுக்கு ஆதரவாக முதலில் வந்து நிற்கும் கட்சி திமுகதான் என்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார். சென்னையில் நடைபெற்ற நபிகள் நாயகத்தின் 1500-ஆவது பிறந்தநாள் விழா நிகழ்ச்சியில் பங்கேற்று... மேலும் பார்க்க