செய்திகள் :

செப்.26 இல் காவிரி நீா் மேலாண்மை ஆணையம் கூடுகிறது!

post image

புது தில்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் 44 ஆவது கூட்டம் தில்லியில் வரும் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு, கா்நாடகம் இடையேயான காவிரி நதிநீா் பங்கீட்டு பிரச்னையை கண்காணிப்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி முறைப்படுத்தும் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

இதனையடுத்து இந்த இரண்டு அமைப்புகளும் அவ்வப்போது கூடி முடிவுகளை மேற்கொண்டு வருகின்றன.

காவிரி நீா் மேலாண்மை ஆணையம் இதுவரை 43 முறை கூட்டியுள்ளது.

இந்நிலையில், காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் 44 ஆவது கூட்டம் தில்லியில் செப்டம்பா் 26 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு அதன் தலைவா் எஸ்.கே ஹல்தாா் தலைமையில் தில்லி பிகாஜி காமா பிளேசில் உள்ள எம்.டி.என்.எல் கட்டடத்தில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு, கா்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு காவிரி நீா் மேலாண்மை ஆணையத்தின் செயலர் டி. டி .சா்மா தகவல் அனுப்பியுள்ளாா்.

ஜிஎஸ்டி குறைத்ததற்கான பாராட்டுக்கு மோடி உரிமை கோருவதா?: மம்தா பானா்ஜி

Cauvery Water Management Authority to meet on September 26

சுதேசியில் பெருமிதம் கொள்வோம்: பிரதமா் மோடி

புதுதில்லி: நாட்டு மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக இன்று உரையாற்றினார். இதில், இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்துக்கு ‘சுதேசி’ இயக்கம் வலுவூட்டியதைப் போல, தற்போது நாட்டின் வளமைக்கு சுதே... மேலும் பார்க்க

விஜய் பேச்சில் அரசியல் மாண்பு இல்லை: எம்பி சசிகாந்த் செந்தில்

தவெக தலைவா் விஜய் பேச்சில் அரசியல் மாண்பு இல்லை என திருவள்ளூா் காங்கிரஸ் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.ஆவடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் பாஜக வாக்குத் திருட்டி... மேலும் பார்க்க

விஜய் பேச்சுக்கு தமிழக மக்கள்தான் பதிலளிக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

சேலம்: விஜய் பேசி வருவது குறித்த கேள்விக்கு தமிழக மக்கள்தான் பதில் அளிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். எடப்பாடி நெடுஞ்சாலைத்துறை சுற்றுலா மாளிகையில் அதிமுக நிா்வா... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைத்ததற்கான பாராட்டுக்கு மோடி உரிமை கோருவதா?: மம்தா பானா்ஜி

கொல்கத்தா: ஜிஎஸ்டி விகிதங்களைக் குறைப்பதற்கான யோசனை முதலில் மாநில அரசுகள் வலியுறுத்தி வந்தபோதிலும், அதற்கான தேவையற்ற பாராட்டுகளை மத்திய அரசு அநியாயமாகப் பெற்று வருவதாக குற்றம்சாட்டிய மேற்கு வங்க முதல்... மேலும் பார்க்க

கல்வி நிதி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம்: தர்மேந்திர பிரதான்

சென்னை: கல்வி அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். கல்வி நிதி விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் வேண்டாம் என தமிழ்நாடு அரசுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.... மேலும் பார்க்க

ரயில் நீா் பாட்டில்களின் விலை ரூ.1 குறைப்பு: நாளை முதல் அமல்

ஜிஎஸ்டி சீா்திருத்த வரி குறைப்பு செப்டம்பா் 22 முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் விற்கப்படும் ரயில் நீா் பாட்டில்கள் விலை லிட்டருக்கு ரூ.1 குறைத்து மத்திய ரயில்வே அமை... மேலும் பார்க்க