செய்திகள் :

GST 2.0: "கூட்டிய வரியைக் குறைத்த அரசாங்கம் மோடியினுடையது மட்டுமே" - நயினார் நாகேந்திரன் பெருமிதம்

post image

திண்டுக்கல் எம்.வி.எம் அரசு மேல் நிலைப்பள்ளியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொள்ள வந்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, "பிரதமர் நரேந்திர மோடி ஜி.எஸ்.டி வரிக்குறைப்பு குறித்துத் தெரிவித்துள்ளார்.

இதில் 90 சதவீத பொருட்களின் ஜிஎஸ்டி வரி 12 லிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 5% ஜிஎஸ்டி இருந்த பொருள்களுக்கு 0% என வரிக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக கம்பி, சிமெண்ட்ற்கு 28% வரி இருந்ததைக் குறைத்துள்ளனர். இதன் மூலம் சிமெண்ட் விலை ரூ.50 முதல் 60 வரை குறைகிறது.

பொருட்களின் விலை குறைக்கவில்லை என நுகர்வோர் புகார் அளித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி | GST
ஜி.எஸ்.டி | GST

கூடுதல் வரிவிதிப்பு செய்யப்பட்டிருந்த டூத் பேஸ்ட், டூத் பவுடர், ஹேர் ஆயில் மற்றும் சோப் ஆகியவற்றிற்கு 5% வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாலுக்கு வரி கிடையாது. ஏசி, இன்சுரன்ஸ் வரிகள் குறைக்கப்பட்டுள்ளது.

தற்போது வரிக்குறைப்பினால் பொருட்களை அதிகளவில் மக்கள் வாங்குவார்கள். அதன் மூலம் பொருட்கள் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

மறைமுகமாக வேலைவாய்ப்பு கிடைக்கும். மக்கள் பயன்படுத்தும் பொருட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

இந்தியாவில் சுதந்திரம் கிடைத்த பிறகு இதுவரை கூட்டிய வரியைக் குறைத்த அரசாங்கம் பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கமாக மட்டுமே இருக்க முடியும்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

GST 2.0 இன்று முதல் அமல்; தீப்பெட்டி, ஐஸ்கிரீம் முதல் கார் வரை எவ்வளவு வரி குறைகிறது?

கடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த 'ஜி.எஸ்.டி 2.0' இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதுவரை 5 சதவிகிதம், 12 சதவிகிதம், 18 சதவிகிதம் மற்றும் 28 சதவிகிதம் ... மேலும் பார்க்க

Modi: "நாளை முதல் புதிய GST அமல்; GST Bachat Utsav என்ற விழாவும் தொடங்கும்" - பிரதமர் மோடி உரை

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது சுதந்திர தின விழா உரையில் இந்தியப் பிரதமர் மோடி, தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரியைக் குறைப்பதாக அறிவித்தார்.2017 ஜூலை மாதத்தில் இந்தியாவில் ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்ட போது... மேலும் பார்க்க

H-1B Visa: "இந்தியர்களுக்குப் பெரும் சவால் காத்திருக்கிறதா?" - பேராசிரியர் கிளாட்சன் சேவியர் பேட்டி

அமெரிக்காவைப் பின்னோக்கி இழுத்துச் சென்று கொண்டிருக்கிறார் அதிபர் ட்ரம்ப். அவருடைய அறிவிப்புகள் வரக்கூடிய நாட்களில் பெரும் பிரச்னையாக மாறும் குறிப்பாக இந்தியர்களுக்குப் பெரும் சிக்கல்களும் சவால்களும் ... மேலும் பார்க்க

Modi: பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் காணொலி மூலம் உரையாடுகிறார்; பின்னணி என்ன?

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது சுதந்திர தின விழா உரையில் இந்திய பிரதமர் மோடி, தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரியைக் குறைப்பதாக அறிவித்தார். 2017 ஜூலை மாதத்தில் இந்தியாவில் ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்ட போது,... மேலும் பார்க்க

ADMK - BJP: எடப்பாடி பழனிசாமி - நயினார் திடீர் சந்திப்பு! - பின்னணி என்ன?

கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்து, "அதிமுக ஒன்றிணைய, பிரிந்தவர்கள் ஒன்று சேர வேண்டும். அப்போதுதான் வெற்றிபெற முடியும். 10 நாள்களுக்குள் இது நடக்கவில்லை என்றால் தேர்தல... மேலும் பார்க்க

Modi: "இந்தியாவின் மிகப்பெரிய எதிரி இதுதான்;எல்லா பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு..!" - பிரதமர் மோடி

குஜராத்தின் பாவ் நகரில் ரூ.34,200 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.இதையடுத்து இந்தியாவின் வளர்ச்சிக் குறித்துப் பேசிய மோடி, இந்தியாவின் எதிரி மற்ற நாடுகளைச் சார்... மேலும் பார்க்க