திருப்பதி கோயிலில் ரூ.100 கோடி ஊழல்! - ஜெகன்மோகன் ரெட்டி மீது TDP குற்றச்சாட்டு|...
சத்தீஸ்கரில் என்கவுன்டரில் நக்சல் சுட்டுக்கொலை
சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மகாராஷ்டிரத்தையொட்டிய அபுஜ்மாத்தில் உள்ள வனப் பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் குறித்த தகவல்களின் அடிப்படையில் திங்கள்கிழமை காலை பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நடந்த என்கவுன்டரில் நக்சல் ஒருவர் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திலிருந்து இதுவரை ஒரு ஆண் நக்சலின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் அவ்வப்போது துப்பாக்கிச் சண்டை நடந்து வருவதாகவும் போலீஸ் அதிகாரி கூறினார். சத்தீஸ்கரில் இந்த ஆண்டு இதுவரை தனித்தனி என்கவுன்டர்களில் 248 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மும்பையில் வேகமாக வந்த சொகுசு கார் விபத்தில் சிக்கியது ! (விடியோ)
அவர்களில், ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தர் பிரிவில் 219 பேரும், ராய்ப்பூர் பிரிவில் வரும் கரியாபந்த் மாவட்டத்தில் 27 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதோடு துர்க் பிரிவில் உள்ள மொஹ்லா-மன்பூர்-அம்பாகர் சௌகி மாவட்டத்தில் மேலும் இரண்டு நக்சல்கள் கொல்லப்பட்டனர்.
கடந்த செப்டம்பர் 11 ஆம் தேதி கரியாபந்த் மாவட்டத்தில் நடந்த ஒரு மோதலில் தடைசெய்யப்பட்ட சிபிஐ (மாவோயிஸ்ட்) மத்திய குழு உறுப்பினர் மோடம் பாலகிருஷ்ணா உள்பட பத்து நக்சல்கள் கொல்லப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.