சமூகநீதி விடுதிகளில் மதமாற்றமா? நயினார் நாகேந்திரன் வெளியிட்ட விடியோ!
திருப்பத்தூர் பகுதியில் தொடர் மழை: நிரம்பி வழியும் ஆண்டியப்பனூர் ஓடை நீர் தேக்கம்
திருப்பத்தூர் பகுதியில் கடந்த ஒரு வாரமாக பெய்த கன மழையினால் ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம் நிரம்பி உபரி நீர் வெளியேறுகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தின் ஒரே நீர்த்தேக்கம் ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம் ஆகும். இதன் மொத்த உயரம் 8 மீட்டர். இதன் கொள்ளளவு 112.00 மில்லியன் கனஅடி கொண்டது.
இந்த நிலையில் கடந்த வாரம் முழுவதும் திருப்பத்தூர் அதன் சுற்றுப்பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக அணையின் கொள்ளளவு திங்கள்கிழமை நிலவரப்படி 112.200 மில்லியன் கனஅடி.
இதையடுத்து அணையிலிருந்து வினாடிக்கு 750 கனஅடி உபரி நீர் வெளியேறுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று முதல் ஜிஎஸ்டி 2.0! ஜிஎஸ்டியே இல்லாமல் கிடைக்கும் பொருள்களின் பட்டியல்!
மேலும் அவர்கள் கூறியது: இந்த ஓடையில் இருந்து சின்ன சமுத்திரம் ஏரி, மாடப்பள்ளி ஏரி, கனமந்தூர் ஏரி செலந்தம்பள்ளி ஏரி, கம்பளிக்குப்பம் ஏரி, திருப்பத்தூர் பெரிய ஏரி உள்ளிட்ட 6 ஏரிகள் நிரம்பி தற்போது ராச்சமங்கலம் ஏரி, கோனேரிகுப்பம் ஏரி, பசலிக்குட்டை ஏரி நிரம்பி பாம்பாற்றை சென்றடைவதாக தெரிவித்தனர்.