செய்திகள் :

"குறைந்த GST வரி, குறையாத ஆவின் பால் பொருள்கள் விலை; திமுக திருட்டுத்தனம் செய்யக் கூடாது" - அன்புமணி

post image

பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்று தீபாவளி பரிசாக ஜி.எஸ்.டி வரியைக் குறைக்கப்போவதாக அறிவித்திருந்தார்.

அதன்படி, ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த 'ஜி.எஸ்.டி 2.0' மோடியின் அறிவிப்புடன் இன்று முதல் அமலுக்கு வந்திருக்கிறது.

முன்னதாக, 2017-ல் இந்தியாவில் ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்ட போது, 5 சதவிகிதம், 12 சதவிகிதம், 18 சதவிகிதம், 28 சதவிகிதம் என நான்கு வகை வரிகள் கொண்டு வரப்பட்டன.

ஆவின்

இப்போது, ஜி.எஸ்.டி 2.0-ல் 5 சதவிகிதம், 18 சதவிகிதம் என இரண்டு வகையான வரிகளாகக் குறைக்கப்பட்டிருக்கின்றன.

இதனால், அத்தியாவசிய மற்றும் பயன்பாட்டு பொருள்கள், உணவுப் பொருள்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், வாகனங்கள் ஆகியவற்றில் வரிகள் குறைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில், ஜி.எஸ்.வரி குறைப்புக்குப் பின்னும் தமிழ்நாடு அரசின் ஆவின் நிறுவனம் தாங்கள் தயாரிக்கும் பால் பொருள்களின் விலையைக் குறைக்காமல் மக்களை ஏமாற்றுவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

இது குறித்து அன்புமணி தனது எக்ஸ் தளப் பக்க பதிவில், "ஜி.எஸ்.டி வரிக் குறைப்புக்குப் பிறகும் தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் அதன் பால் பொருள்களின் விலைகளைக் குறைக்கவில்லை என்று குற்றஞ்சாட்டி இன்று காலை நான் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், ஜி.எஸ்.டி வரிக்குறைப்புக்கு ஏற்ற வகையில் ஆவின் பால் பொருள்களின் விலை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அரசின் சார்பில் ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அவை செய்தியாக ஒளிபரப்பாகி வருகின்றன.

ஆவின் பால் பொருள்களின் விலை குறைக்கப்படவில்லை; இது மக்களை ஏமாற்றும் முயற்சி என்பது தான் உண்மை.

ஜி.எஸ்.டி குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கேற்றவாறு பால் பொருள்களின் விலை குறைக்கப்பட வேண்டும். ஆனால், ஆவின் நிறுவனம் அவ்வாறு செய்யவில்லை.

பாமக தலைவர் அன்புமணி
அன்புமணி

மாறாக, ஆவின் பால் பொருள்களின் அதிகபட்ச விற்பனை விலையில் எந்த மாற்றத்தையும் செய்யாத ஆவின் நிறுவனம், வரி எந்த அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளதோ, அதற்கு ஏற்றவாறு அடிப்படை விலையை உயர்த்தியுள்ளது.

எடுத்துக்காட்டாக ஒரு கிலோ நெய்யின் அதிகபட்ச விற்பனை விலை ரூ.700. இதில் அடிப்படை விலை ரூ.625. 12 சதவிகித ஜி.எஸ்.டி வரி ரூ.75 ஆகும்.

ஆவின் நெய் மீதான ஜி.எஸ்.டி வரி 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் மதிப்பு ரூ.31 மட்டும் தான். அதன்படி ஆவின் நெய் ஒரு கிலோ ரூ.656-க்கும் மட்டுமே விற்கப்பட வேண்டும்.

அமுல், நந்தினி போன்ற பொதுத்துறை பால் நிறுவனங்கள் இந்த அடிப்படையில்தான் விலைக்குறைப்பு செய்துள்ளன.

ஆனால், ஆவின் நிறுவனமோ ஒரு கிலோ நெய்யின் அடிப்படை விலையை ரூ.625-லிருந்து ரூ.669 ஆக உயர்த்தி அத்துடன் ரூ.31 ஜி.எஸ்.டி விலை சேர்த்து அதிகபட்ச விலையாக ரூ.700 நிர்ணயித்துள்ளது.

அதே நேரத்தில் ஜி.எஸ்.டி வரிக்குறைப்பு நடைமுறைப்படுத்தப்படும் இந்த நாளில் விலையைக் குறைத்ததாகக் கணக்குக் காட்டும் நோக்குடன் இன்று முதல் நவம்பர் 30 வரை ஒரு கிலோ நெய்க்கு ரூ.40 தள்ளுபடி வழங்குகிறது.

இந்த தள்ளுபடியும் கூட ஆவின் நெய், பன்னீர் ஆகியவற்றுக்கு குறைந்த அளவில் தரப்படுகிறதே தவிர, பிற பால் பொருள்களுக்குத் தரப்படவில்லை. அவை அதிக விலைக்குத்தான் விற்பனை செய்யப்படுகின்றன.

நவம்பர் மாதத்துடன் இந்தத் தள்ளுபடி ரத்து செய்யப்படும் நிலையில், டிசம்பர் மாதம் முதல் ஆவின் நெய், பன்னீர் ஆகியவற்றின் விலைகள் மீண்டும் உயர்த்தப்படும்.

தி.மு.க அரசின் கீழ் செயல்படும் ஆவின் நிறுவனம் நடத்தும் இந்த நாடகங்கள் அப்பட்டமான திருட்டுத்தனம் ஆகும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

`விஜயனும் ஸ்டாலினும் நாஸ்திக் டிராமாச்சாரிகள்' - சபரிமலை பாதுகாப்பு சங்கமத்தில் அண்ணாமலை பேச்சு!

கேரள அரசின் திருவிதாங்கூர் தேவசம் போர்டு சார்பில் பம்பாவில் கடந்த 20-ம் தேதி அகில உலக ஐயப்ப சங்கமம் மாநாடு நடத்தப்பட்டது. கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்த அந்த மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் ச... மேலும் பார்க்க

இனப்படுகொலை : வரலாற்றில் வெறும் எண்கள் ஆகிப் போனவர்களா ரூவாண்டா முதல் காசா வரையிலான மக்கள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சில் நிறுவிய குழு ஒன்று , காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையை (genocide) நிகழ்த்துவதாக கூறி உள்ளதுஇதில், காசாவில் பாலஸ்தீனியர்களை அழிக்க வேண்டும் என்ற நோக்கம் இஸ்ரேல் அதிக... மேலும் பார்க்க

Voter list row: Rahul வெளியிட்டிருப்பது Teaser தான் | Congress-இன் Data புலி Praveen Chakravarty

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளது என்று ராகுல் காந்தி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்துள்ளது. குற்றச்சாட்டின் முகமாக ராகுல்காந்தி இருந்தாலும்... மேலும் பார்க்க

பாலஸ்தீனத்தை நாடாக அங்கீகரித்த பிரிட்டன், ஆஸ்., கனடா- நெதன்யாகு எதிர்ப்பு; இந்தியா நிலைப்பாடு?|அலசல்

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலின் கொடூர தாக்குதல் கரம் தினம் தினம் நீண்டுக்கொண்டே இருக்கின்றன. 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இந்தப் போர் இன்னும் சில தினங்களில் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. ஆ... மேலும் பார்க்க

50% வரி, Chabahar, H-1B விசா; வரிசைக்கட்டி உள்ள பிரச்னைகள்... அமெரிக்கா செல்லும் பியூஷ், ஜெய்சங்கர்!

இன்று அமெரிக்காவில் ஆறாவது கட்ட இந்தியா - அமெரிக்கா பேச்சுவார்த்தை நடக்க உள்ளன. (இந்திய நேரப்படி இன்று இரவு)இந்தப் பேச்சுவார்த்தைக்காக இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா... மேலும் பார்க்க

கனிமொழி பொதுக்கூட்டத்தில் திடீரென புகுந்த ஆம்புலன்ஸ்; நாகர்கோவிலில் நடந்தது என்ன?

கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன், ஓரணியில் தமிழ்நாடு- தீர்மான உறுதிமொழி ஏற்பு கூட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி கி... மேலும் பார்க்க