திருவாரூர்: ``திமுக-வுடன் போட்டி போட உனக்கு தகுதியே இல்ல...” - அமைச்சர் கே.என்.ந...
சரிவைக் கண்ட ஸ்மார்ட்போன் ஏற்றுமதி!
புதுதில்லி: இந்தியாவின் மிகப்பெரிய சந்தையான அமெரிக்காவிற்கு, ஸ்மார்ட்போன் ஏற்றுமதியானது, மே மாதத்தில் 229 கோடி அமெரிக்க டாலர்களிலிருந்து, ஆகஸ்ட் மாதம் 9.648 கோடி அமெரிக்க டாலராக, அதாவது 58 சதவிகிதம் சரிந்துள்ளதாக உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட்போன்களுக்கு எந்த வரிகளும் விதிக்கப்படாததால் இந்த வீழ்ச்சி கவலையளிக்கும் வகையில் உள்ளதாக தெரிவித்துள்ளது. அதே வேளையில், வீழ்ச்சிக்குக் காரணமான உண்மையான காரணங்களைக் கண்டறிய அவசர விசாரணை வேண்டும் என்றது.
அமெரிக்காவிற்கு மிகப்பெரிய ஏற்றுமதியாளரான இந்தியாவின் ஸ்மார்ட்போன் சந்தை மே 2025ல் 229 கோடி அமெரிக்க டாலர்களிலிருந்து ஆகஸ்ட் மாதம் 96.48 கோடி அமெரிக்க டாலர்களாக அதாவது 58% சரிந்ததுள்ளது. இந்த சரிவானது மாதந்தோறும் சீராக இருப்பதாக ஜிடிஆர்ஐ (உலகளாவிய வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு) தெரிவித்துள்ளது.
ஜூன் மாதத்தில் 200 கோடி அமெரிக்க டாலர்களாகவும், ஜூலையில் 152 கோடி அமெரிக்க டாலர்களாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
நிதியாண்டு 2025ல், அமெரிக்கா இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் சந்தையாக 1060 கோடி டாலர் அளவில் இறக்குமதி செய்ததுடன், அதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் 710 கோடி டாலர் இறக்குமதி செய்தது.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் சரிந்து ரூ.88.31ஆக நிறைவு!