செய்திகள் :

நெல்லை: ஒரே நாளில் 14 பேரை கடித்த வளர்ப்பு நாய்; உரிமையாளர் மீது வழக்குப்பதிவு!

post image

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பகுதியில் சமீப காலமாக நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணிகள் குறைந்துள்ளது. இதனால், நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலைகள், தெருக்களில் நாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிகிறது. சாலைகளில் செல்லும் பைக்குகளுக்கு இடையில் பாய்ந்தும், ஓடி விளையாடும் சிறுவர், சிறுமியர்களை துரத்தியும், பெண்கள் மற்றும் முதியவர்களை பார்த்து குரைத்தும் அச்சுறுத்தி வருகிறது. சில சமயங்களில் தெருக்களில் செல்வோரை கடித்தும் விடுகிறது. நாய்கள் விரட்டுவதில் விபத்துகளிலும் சிக்கிக் கொள்கின்றனர்.

அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனை

கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லிடைக்குறிச்சியில் ஒரே நாய் 13 பேரை கடித்தது. கடந்த 16-ம் தேதி ஜமீன் சிங்கம்ப்பட்டியில் வீடுகளில் மின் கணக்கீடு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த மின் வாரிய ஊழியரை நாய் ஒன்று கடித்தது.  கடந்த 20-ம் தேதி வி.கே.புரத்தில் கிருஷ்ணன் என்பவரின் வீட்டில் உள்ள வளர்ப்பு நாய் அவரை கடித்தது மட்டுமின்றி சாலையில் நடந்து சென்ற 14 பேரை கடித்துள்ளது. இதனையடுத்து காயமடைந்தவர்கள் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அதில் 4 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தெருக்களில் நடந்து செல்லவே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வி.கே.புரம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார் வி.கே.புரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வளர்ப்பு நாயின் உரிமையாளர் கிருஷ்ணன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையம்

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தெரு நாய்க்கடி சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், வளர்ப்பு நாய் வெறி பிடித்து உரிமையாளரையே கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாய்களின் உரிமையாளர்கள் தாங்கள் வளர்க்கும் நாய்களுக்கு சரியான முறையில் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதிப்படுத்துவதோடு, அவற்றை வெளியே அழைத்து வரும் போது யாரையும் கடித்து விடாதபடி நாயின் வாய் பகுதியை கவசத்தால் மூடியிருக்க வேண்டும் போன்ற விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில் மோதி இறந்த பெண்; வேடிக்கை பார்க்கச் சென்ற நபரும் உயிரிழந்த பரிதாபம் - குளித்தலை சோகம்

திருச்சி மாவட்டம், தொட்டியம் பகுதியைச் சேர்ந்தவர் அன்னக்கிளி (வயது 52). இவர், கரூர் மாவட்டம், சிந்தலவாடியில் உள்ள தன் தாயார் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில், லாலாபேட்டை ரயில் நிலையம் அருகே ரயில்வே... மேலும் பார்க்க

பாம்பன் பாலத்தில் சென்ற ரயில்; கடலில் தவறி விழுந்த வாலிபர்... காயம் இன்றி உயிர் தப்பிய அதிசயம்!

மதுரை பரவை பகுதியை சேர்ந்த இளைஞர் வரதராஜன். வங்கி ஊழியரான இவர், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்ய நேற்று காலை மதுரையில் இருந்து ராமேசுவரம் வந்துள்ளார். மதுரை பாசஞ்சர் ரயிலில் ராமேசுவரம் வ... மேலும் பார்க்க

4-வது மாடியிலிருந்து விழுந்து பிழைத்த குழந்தை; டிராபிக்கில் 4 மணி நேரம் சிக்கியதால் உயிரிழப்பு

புல் தடுக்கி விழுந்து உயிரிழந்தவர்களும் உண்டு. அதே சமயம் மிகப்பெரிய விபத்தில் சிக்கியவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவமும் நடந்துள்ளது.மும்பையில் நான்காவது மாடியில் இருந்து விழுந்த குழந்தை அதி... மேலும் பார்க்க

கேரளா: இடுக்கி ரிசார்ட் கட்டுமானத்தில் விபத்து; மண் சரிந்து 2 தொழிலாளர்கள் பலி | Photo Album

தொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிதொழிலாளர்கள் பலிகேரளாவிலும் தமிழ்நாட்டிலும் வாக்குரிமை..... மேலும் பார்க்க

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த பெண் பலி; போலீஸ் தீவிர விசாரணை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள கங்கர்செவல் சத்திரப்பட்டி கிராமத்தில் திவ்யா பைரோடெக் எனும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.இந்த வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒரு பெண் ஒருவர் உயிரிழ... மேலும் பார்க்க

``தொந்தரவு செய்ய விரும்பவில்லை'' - மனநிலை பாதித்த மகனுடன் 13-வது மாடியில் இருந்து குதித்த தாய்

டெல்லி அருகிலுள்ள நொய்டாவில் சாக்‌ஷி சாவ்லா (37) வசித்து வந்தார். அவரது கணவர் தர்பன் சாவ்லா ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் 11 வயது மகன் உள்ளான். ஆனால் அவர் மனநிலை பாதிப்பால் அவதிப... மேலும் பார்க்க