செய்திகள் :

"கொள்கைப் படையாய்த் திரண்ட மக்கள்; 2 நாட்களில், மாநிலம் முழுவதும் 72 கூட்டங்கள்" -மு.க.ஸ்டாலின்

post image

தமிழக அரசியலில் எந்தக் கட்சிக்கு அதிகம் கூட்டம் கூடுகிறது என்பதுதான் இப்போது போட்டியாக இருக்கிறது.

வாரந்தோறும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் ஒவ்வொரு மாவட்டமாக மக்களைச் சந்தித்து வரும் விஜய்க்கு கூட்டம் கூடி வருகிறது. இந்தக் கூட்டமெல்லாம் ஓட்டாக மாறுமா என்பதுதான் விவாதப்பொருளாக வெடித்திருக்கிறது. கொள்கை கூட்டம் - ரசிகர்கள் கூட்டம் என்றெல்லாம் விவாதித்து வருகின்றனர்.

அரசியலில் பலரும் விஜயகாந்த், சிரஞ்சீவி, சரத்குமார், கமல் என எல்லோருக்கும் ரசிகர்கள் கூட்டம் வந்திருக்கிறது. ஆனால், அவையெல்லாம் ஓட்டாக மாறுமா என்பதுதான் சந்தேகம் என்று மறைமுகமாக விமர்சித்துப் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் திமுகவினரும் மாநாடுகள், கூட்டங்கள் நடத்தி தங்கள் கூட்டத்தையும், பலத்தையும் காட்டத் தொடங்கியிருக்கின்றனர்.

அவ்வகையில் திமுக 'ஓரணியில் தமிழ்நாடு', 'தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்' என திருச்சி, திருவாரூர், கிருஷ்ணகிரி, அரியலூர், ஆர்.கே.நகர், விருதாச்சலம், காஞ்சிபுரம், விருதுநகர் எனப் பல்வேறு தொகுதிகளில் பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறது.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "கடந்த இரு நாட்களில், மாநிலம் முழுவதும் 72 கழக மாவட்டங்களிலும், தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என உறுதிமொழியேற்க - கொள்கைப் படையாய்த் திரண்ட மக்களுக்கு என் மனம்நிறைந்த நன்றி!" என்று கூறியிருக்கிறார்.

'யார் பெருசுனு அடுச்சுக் காட்டு' என போட்டா போட்டியாக நடந்து வரும் கூட்டம் சேர்க்கும் கட்சிகளின் மாநாடுகள், பொதுக்கூட்டங்களின் கூட்டம் தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

IndiGo: "இன்டிகோ விமானத்தில் சேவை மோசம்; AC கூட இல்லாமல் பயணிகள் தவிப்பு" - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா

இன்டிகோ விமானத்தின் மீது சமீபகாலமாக நிறைய கேளாறுகள் ஏற்படுவதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. கடந்த ஜூன் மாதம்கூட பணியிடத்தில் சாதிய ரீதியிலான ஒடுக்குமுறையை எதிர்கொண்டதாக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்... மேலும் பார்க்க

"சிவகங்கை ஆதிதிராவிடர் சமூகநீதி விடுதியில் கட்டாய மதமாற்றம்"- நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

தமிழகம் முழுவதும் பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகள் ‘சமூக நீதி விடுதிகள்’ என அழைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை மாதம் அறி... மேலும் பார்க்க

GST 2.0: "கூட்டிய வரியைக் குறைத்த அரசாங்கம் மோடியினுடையது மட்டுமே" - நயினார் நாகேந்திரன் பெருமிதம்

திண்டுக்கல் எம்.வி.எம் அரசு மேல் நிலைப்பள்ளியில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில் கலந்து கொள்ள வந்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந... மேலும் பார்க்க

GST 2.0 இன்று முதல் அமல்; தீப்பெட்டி, ஐஸ்கிரீம் முதல் கார் வரை எவ்வளவு வரி குறைகிறது?

கடந்த ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த 'ஜி.எஸ்.டி 2.0' இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதுவரை 5 சதவிகிதம், 12 சதவிகிதம், 18 சதவிகிதம் மற்றும் 28 சதவிகிதம் ... மேலும் பார்க்க

Modi: "நாளை முதல் புதிய GST அமல்; GST Bachat Utsav என்ற விழாவும் தொடங்கும்" - பிரதமர் மோடி உரை

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தனது சுதந்திர தின விழா உரையில் இந்தியப் பிரதமர் மோடி, தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரியைக் குறைப்பதாக அறிவித்தார்.2017 ஜூலை மாதத்தில் இந்தியாவில் ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்ட போது... மேலும் பார்க்க

H-1B Visa: "இந்தியர்களுக்குப் பெரும் சவால் காத்திருக்கிறதா?" - பேராசிரியர் கிளாட்சன் சேவியர் பேட்டி

அமெரிக்காவைப் பின்னோக்கி இழுத்துச் சென்று கொண்டிருக்கிறார் அதிபர் ட்ரம்ப். அவருடைய அறிவிப்புகள் வரக்கூடிய நாட்களில் பெரும் பிரச்னையாக மாறும் குறிப்பாக இந்தியர்களுக்குப் பெரும் சிக்கல்களும் சவால்களும் ... மேலும் பார்க்க