வாங்கடா... வெளியானது பவன் கல்யாணின் ஓஜி டிரைலர்!
பவன் கல்யாண் நடிப்பில் உருவான ஓஜி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
ஆந்திர துணை முதல்வரான பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்தை தொடர்ந்து ‘தே கால் ஹிம் ஓஜி’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தை சாகோ மற்றும் ரன் ராஜா ரன் ஆகியப் படங்களை இயக்கிய சுஜித் இயக்கியுள்ளதால் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 2023 ஆம் ஆண்டிலிருந்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வரும் நிலையில், பவன் கல்யாண் துணை முதல்வரானார். இதனால், படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.
பவன் கல்யாணுடன் பிரியங்கா மோகன் மற்றும் எம்ரான் ஹம்ஷி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகிற செப்டம்பர் 25 ஆம் தேதி வெளியாகிறது.
இதையும் படிக்க: திரிஷ்யம் - 3 படப்பிடிப்பு துவக்கம்!
இந்த நிலையில், படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர். அதிரடி ஆக்சன் கதையாக உருவான காட்சிகள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.