2,417 கிராம செவிலியர் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: முதல்வர் ஸ்டாலி...
ஒரு நாயகன், இரு மனைவி... திருமாங்கல்யம் தொடரின் புதிய முன்னோட்ட விடியோ!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திருமாங்கல்யம் தொடர் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது.
இத்தொடரில் காயூ ஸ்ரீ, மேகா சல்மான் ஆகியோர் நாயகிகளாகவும், பிரித்விராஜ் நாயகனாகவும் நடிக்கவுள்ளனர்.
மேகா சல்மான் கேரளத்தில் சில தொடர்களில் நடித்து பிரபலமானவர். தற்போது தமிழில் புதிய தொடரில் நடிக்கவுள்ளார்.
இதேபோன்று, நடிகர் பிரித்விராஜ் தெலுங்கில் மூன்று தொடர்களில் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ளார். திருமாங்கல்யம் தொடரின் மூலம் தமிழுக்கு நாயகனாக அறிமுகமாகிறார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள இந்தத் தொடரில், கட்டாயத்தின்பேரில் நாயகி மேகாவுக்கு பிரித்விராஜ் தாலி கட்ட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆனால், இவர் முன்பே காயூ ஸ்ரீ உடன் திருமண நிச்சயதார்தத்தை முடித்திருப்பார். இருவரும் காதலித்து வரும் நிலையில், கட்டாயத்தால் மற்றொரு பெண்ணுக்கு தாலி கட்டி விடுகிறார்.
இவர்கள் மூவருக்கு இடையிலான கதையே திருமாங்கல்யம் தொடரின் மையக்கருவாகும்.

கேரள நாயகியுடன் தெலுங்கு நாயகன் நடிக்கும் திருமாங்கல்யம் தொடரில் மற்ற துணை பாத்திரங்கள் அனைவருமே தமிழில் நடிப்பவர்களாகவே உள்ளனர்.
ஜீ தமிழில் புதிதாக ஆல்யா மானசாவின் பாரிஜாதம் தொடர் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிவரும் நிலையில், தற்போது திருமாங்கல்யம் தொடரும் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இது தொடர்பான நேரத்தை தயாரிப்பு நிறுவனம் விரைவில் அறிவிக்கவுள்ளது.
இதையும் படிக்க | நடிகை அம்பிகா, ஜோவிகா பங்கேற்கும் சமையல் எக்ஸ்பிரஸ் -2!