செய்திகள் :

ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ஏர் தரமற்றவையா? குவியும் புகார்கள்!

post image

ஆப்பிள் நிறுவனத்தில் புதிதாக ஐபோன் 17 வரிசை ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன.

இவை பயனாளர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளதால், முன்பதிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ஏர் ஆகியவை தொழில்நுட்ப ரீதியில் மிகவும் மேம்பட்ட ஸ்மார்ட்போன்களாக உள்ளன. எனினும் சமீபத்தில் இதன் பயனாளர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களே முன்வைக்கப்படுகின்றன.

ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ஏர் ஆகிய இரு ஸ்மார்ட்போன்களிலும் கீறல்கள் ஏற்படுவதாக பயனர்கள் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர். சில வண்ணங்களை உடைய குறிப்பாக அடர் நிறங்களையுடைய ஸ்மார்ட்போன்களில் மட்டுமே இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது ஐபோன் 17 வரிசை ஸ்மார்ட்போன்களின் தரத்தில் கேள்வியை எழுப்பியுள்ளன.

ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ஏர் - கீறல்கள்

ஐபோன் 17 வரிசையில் உள்ள அனைத்து ஸ்மார்ட்போன்களிலும் செராமிக் உறையை ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ளது. இருந்தபோதிலும் ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ஏர் ஸ்மார்ட்போன் பயனாளர்கள் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

அதாவது, இந்த இரு ஸ்மார்ட்போன்களிலும் வெளிப்புறத்தில் கீறல்கள் ஏற்படுவதாகவும், இதனால் பயனாளர்கள் மிகுந்த எச்சரிக்கையோடு பயன்படுத்த வேண்டும் எனக் கோரி, கீறல் விழுந்த புகைப்படங்களையும் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

நிலைத்தன்மையுடன் வெளிப்புற உறைகளை ஆப்பிள் தயாரித்திருந்தாலும், அடர் நீலம், கருப்பு வண்ணங்களையுடைய ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஏர்களில் இத்தகைய கீறல்கள் ஏற்படுவதாக பலர் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளனர்.

ஆப்பிள் நிறுவனத்தின் பிரீமியம் தயாரிப்பில் இருந்து இதனையா எதிர்பார்த்தோம்? எனப் பலர் புகைப்படங்களைப் பகிர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஐபோன் 17 ஏர் ஸ்மார்ட்போன், டைட்டானியம் உலோகத்தாலானது. அலுமினியம் தயாரிப்பை விட அதிக நிலைத்தன்மை கொண்டதாக இது இருக்கும். எனினும், பின்புறம் செராமிக் உறையாலாக்கப்பட்டுள்ளது. ஐபோன் 17 ப்ரோ மாடல்களைப் போன்று தூசி புகாத்தன்மையுடன் இருக்கும் வகையில் IP68 திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

புதிய தயாரிப்புகள் எதுவாகினும் அதன் நிலைத்தன்மைக்கு 100% உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதே நிறுவனங்களின் தரப்பு விளக்கமாக உள்ளது. ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ஏர் ஸ்மார்ட்போன்களில் அடர் நிறங்களில் மட்டுமே இத்தகைய பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதனால், முடிந்த வரையில் பின்புறம் கூடுதலான உறைகளுடன் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்துவது கூடுதல் நிலைத்தன்மைக்கு வழிவகுக்கும்.

இதையும் படிக்க | ஸ்மார்ட்போன்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பு இல்லை! ஆனால் தள்ளுபடி விலையில்...

iPhone 17 Pro and iPhone Air Users Are Reporting Scratch Issues

டிரம்ப், புதின், ஜின்பிங் மூவருக்குமே மோடி நண்பர்! -குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

டொனால்ட் டிரம்ப், விளாதிமீர் புதின், ஜி ஜின்பிங் ஆகிய மூவருக்குமே பிரதமர் நரேந்திர மோடி நண்பர் என்று குடியரசு துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் இன்று(செப். 22) தெரிவித்தார்.குடியரசு துணைத் தலைவராக ப... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர் மாநில அந்தஸ்து விவகாரம்: பிரதமர் ஏன் எதுவும் பேசவில்லை? -ஃபரூக் அப்துல்லா

ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்காக ஞாயிற்றுக்கிழமை(செப். 21) காணொலி வழியாக ஆற்றிய உரையில் கட்டாயம் பேசியிருக்க வேண... மேலும் பார்க்க

கடினமான வளர்ச்சிப் பணிகளை கைவிடுவது காங்கிரஸின் இயல்பு: பிரதமர் மோடி

கடினமான எந்தவொரு வளர்ச்சிப் பணியையும் கைவிடுவது காங்கிரஸின் "இயல்பான பழக்கம்" என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். அருணாச்சலப் பிரதேசத்தில் ரூ. 5,100 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்கள... மேலும் பார்க்க

குஜராத்தில் சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து(விடியோ)

குஜராத்தில் சரக்கு கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. குஜராத் மாநிலம், போர்பந்தர் சுபாஷ்நகர் ஜெட்டியில் நங்கூரமிட்டிருந்த சரக்கு கப்பல் திங்கள்கிழமை திடீரென தீப்பிடித்தது. ஜாம்... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் என்கவுன்டரில் நக்சல் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மகாராஷ்டிரத்தையொட்டிய அபுஜ்மாத்தில் உள்ள வனப் பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் குறித்த த... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீர்திருத்தம் மக்களிடையே தன்னம்பிக்கையை அதிகரிக்கும்: அமித் ஷா

நாடு முழுவதும் புதிய வரி அமைப்பு நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பிரதமர் மோடியின் உறுதிப்பாட்டின் சான்றாகும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். இத... மேலும் பார்க்க