செய்திகள் :

அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழை!

post image

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இன்று(செப். 22, திங்கள்கிழமை) அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது இரவு 7 மணி வரை நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப் பகுதிகள், திண்டுக்கல், திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று (செப். 22) நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

TN rain update for next 3 hours

தில்லி புறப்பட்டார் நயினார் நாகேந்திரன்! காரணம் என்ன?

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னை விமான நிலையத்தில் இருந்து தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.சேலத்தில் நேற்று(செப். 21) பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாட... மேலும் பார்க்க

பள்ளிக் கட்டடங்கள்கூட திமுக ஊழலில் இருந்து தப்பவில்லை: அண்ணாமலை

அரசு பள்ளிக் கட்டடங்கள்கூட திமுக ஊழலில் இருந்து தப்பவில்லை என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியம் சிங... மேலும் பார்க்க

2,417 கிராம செவிலியர் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: முதல்வர் ஸ்டாலின்

2,417 கிராம செவிலியர் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”அரசு செவிலியர் பயிற்சிப் பள்ளியில... மேலும் பார்க்க

துரைமுருகனுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை!

அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தொடர... மேலும் பார்க்க

அண்ணாமலை - டிடிவி தினகரன் திடீர் சந்திப்பு! திருப்பத்தை ஏற்படுத்துமா?

சென்னையில் அமமுக பொதுச் செயலாளர் தினகரனை, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று(செப். 22) சந்தித்துள்ளார்.சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில், தினகரனுடன் அண்ணாமலை சுமார் 2 மணி நேரம் பே... மேலும் பார்க்க

ஸ்மார்ட்போன்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பு இல்லை! ஆனால் தள்ளுபடி விலையில்...

ஜிஎஸ்டி வரிகளில் இரண்டு விகிதங்களை நீக்கிவிட்டு 5%, 18% என்ற இரண்டு அடுக்கு நடைமுறையை கொண்டுவந்ததையடுத்து பல்வேறு பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று(செப்.22) முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூல... மேலும் பார்க்க