2,417 கிராம செவிலியர் காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: முதல்வர் ஸ்டாலி...
ஸ்மார்ட்போன்களுக்கு ஜிஎஸ்டி குறைப்பு இல்லை! ஆனால் தள்ளுபடி விலையில்...
ஜிஎஸ்டி வரிகளில் இரண்டு விகிதங்களை நீக்கிவிட்டு 5%, 18% என்ற இரண்டு அடுக்கு நடைமுறையை கொண்டுவந்ததையடுத்து பல்வேறு பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு இன்று(செப்.22) முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதன் மூலம் குறிப்பாக மின்னணு பொருள்கள், ஆட்டோமொபைல் சாதனங்களின் விலை கணிசமாகக் குறைகிறது. ஜிஎஸ்டி வரை குறைப்பையடுத்து அது சார்ந்த நிறுவனங்களும் எவ்வளவு விலை குறைவு என்பதை அறிவித்து வருகின்றன.
டிவி, ஏசி, பைக்குகள், கார்கள் விலை குறைவதால் வரும் நாள்களில் அதன் விற்பனை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் ஸ்மார்ட்போன்களின் விலை குறையுமா? என்று மக்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், அதில் எந்த வரி மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. முன்பிருந்த 18% வரியே தொடர்ந்து நீடிக்கிறது. இதனால் ஸ்மார்ட்போன்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
ஏனெனில் ஸ்மார்ட்போன்கள் மூலமாக அரசுக்கு வருவாய் அதிகம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. ஸ்மார்ட்போன்கள் மீதான வரியை 18%லிருந்து 5% ஆக குறைக்கும்போது மத்திய, மாநில அரசுகளுக்கு மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதாலேயே அதன் மீதான வரி குறைக்கப்படவில்லை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
அதேபோல மடிக்கணினிகளின் வரி விகிதத்திலும் மாற்றம் செய்யப்படவில்லை. ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள் ஏன் அத்தியாவசியப் பொருள்களில் வகைப்படுத்தப்படவில்லை என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
ஆன்லைன் வர்த்தக தளங்களில் சலுகைகள்...
ஸ்மார்ட்போன்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு இல்லாத நிலையில் தள்ளுபடி விலையில் அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வர்த்தக தளங்களில் நாளை(செப். 23) முதல் வாங்கலாம்.
அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் மற்றும் ஃபிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் டேஸ் விற்பனை நாளை (செப். 23) தொடங்கவுள்ளன.
அமேசானில் சாம்சங், ஆப்பிள், ஒன்பிளஸ், ஐக்யூ, ஸியோமி, ரியல்மி, லாவா மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு அதிக ஆஃபர்களை வழங்குகிறது. பிரைம் வாடிக்கையாளர்கள் 24 மணி நேரத்திற்குள் பொருள்களை பெறும் வசதி உள்ளது. எஸ்பிஐ டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதற்கு மேலும் சில சலுகைகளை வழங்குகின்றன.
ஃபிளிப்கார்ட்டிலும் பல்வேறு மின்னணு சாதனங்கள், ஸ்மார்ட்போன்கள் சலுகைகளில் கிடைக்கின்றன. ஆப்பிள் ஏர்பாட்ஸ் புரோ (2nd gen), சாம்சங் கேலக்சி புக் 4, ஐபேடு, போட் சவுண்ட்பார்கள் போன்றவை அதிக சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆக்சிஸ், ஐசிஐசிஐ வங்கி கார்டுகளுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஐபோன் 16 புரோ ரூ. 69,900 மற்றும் ஐபோன் 15 ரூ. 55,000 -லும் கிடைக்கிறது. இதேபோன்று குறிப்பிட்ட போன் மாடல்களுக்கான தள்ளுபடி விலையை அந்தந்த தளங்களில் அறிந்துகொள்ளலாம்.
Best Offers on Smartphones, Electronics in e-commerce sites
இதையும் படிக்க | ஜிஎஸ்டி குறைப்பு: எந்தெந்த கார்களின் விலை எவ்வளவு குறையும்?