செய்திகள் :

திரிஷ்யம் - 3 படப்பிடிப்பு துவக்கம்!

post image

நடிகர் மோகன்லால் நடிக்கும் திரிஷ்யம் - 3 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் திரில்லர் வகையில் உருவான ‘திரிஷ்யம்’, ‘திரிஷ்யம் 2’ ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றன.

இந்த படம் தமிழில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் வெளியாகி வரவேற்பை பெற்றது. தொடர்ந்து, ஹிந்தி, சீன மொழிகளிலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.

இந்நிலையில், திரிஷ்யம் 3-ஆம் பாகத்திற்கான படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.

இதில், மோகன்லால் மற்றும் இயக்குநர் ஜித்து ஜோசஃப் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். படப்பிடிப்பு தொடுபுழாவில் நடைபெறுகிறது.

இதையும் படிக்க: 38,000 பாடல்கள்... பாடகரின் மறைவால் ஸ்தம்பித்த அசாம்!

actor mohanlal drishyam 3 movie shoot started today with pooja

முட்டையில் மட்டும்தான் புரதம் இருக்கிறதா?

புரதம் என்றாலே நமக்கு முட்டை மட்டும்தான் ஞாபகத்துக்கு வரும். முட்டையில்தான் அதிக புரதம் இருப்பதாகவும் அதை தினமும் உடலில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் பரிந்துரைக்கிறார்கள். முட்டையில் புரதம் அத... மேலும் பார்க்க

வாங்கடா... வெளியானது பவன் கல்யாணின் ஓஜி டிரைலர்!

பவன் கல்யாண் நடிப்பில் உருவான ஓஜி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.ஆந்திர துணை முதல்வரான பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ஹரி ஹர வீரமல்லு திரைப்படத்தை தொடர்ந்து ‘தே கால் ஹிம் ஓஜி’ என்ற திரைப்படத்த... மேலும் பார்க்க

ஒரு நாயகன், இரு மனைவி... திருமாங்கல்யம் தொடரின் புதிய முன்னோட்ட விடியோ!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திருமாங்கல்யம் தொடர் விரைவில் ஒளிபரப்பாகவுள்ளது. இத்தொடரில் காயூ ஸ்ரீ, மேகா சல்மான் ஆகியோர் நாயகிகளாகவும், பிரித்விராஜ் நாயகனாகவும் நடிக்கவுள்ளனர்.மேகா சல்மான் கேரளத்தில் சில... மேலும் பார்க்க

நடிகை அம்பிகா, ஜோவிகா பங்கேற்கும் சமையல் எக்ஸ்பிரஸ் -2!

சமையல் எக்ஸ்பிரஸ் -2 நிகழ்ச்சியில் நடிகை அம்பிகா மற்றும் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா ஆகியோர் போட்டியாளர்களாகப் பங்கேற்கவுள்ளனர். நடிகை சுஜிதா மற்றும் ஷாலின் ஸோயா ஆகியோர் தொகுத்து வழங்கும் இந்த நிகழ... மேலும் பார்க்க

38,000 பாடல்கள்... பாடகரின் மறைவால் ஸ்தம்பித்த அசாம்!

பாடகர் ஸுபீன் கார்க் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடம் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.அசாம் திரையுலகில் முன்னணி பாடகராகத் திகழ்ந்தவர் ஸுபீன் கார்க் (52). அசாமி, ஹிந்தி மற்றும் வங்காளம் உள்பட பல மொழிக... மேலும் பார்க்க

மீனவர்களின் வலியைப் பேசும் கட்டுமரக்காரன் பாடல்!

நடிகர் விக்னேஷ் ரவி நடித்த கட்டுமரக்காரன் பாடல் கவனம் பெற்று வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் அதிக வெற்றிப் படங்களைக் கொடுத்த வெற்றிகரமான தயார... மேலும் பார்க்க