செய்திகள் :

நீலகிரி உள்பட 11 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை!

post image

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,

செப். 22ல் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

செப். 23 முதல் 27 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செப். 26, 27ல் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை..

செப். 22 முதல் 26 வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

சென்னையை பொருத்தவரை..

இன்று (22-09-2025): வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை..

செப். 22 முதல் 24 வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்லவேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வங்கக்கடலில் செப்.25ல் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு!

தமிழகத்தில் வருகின்ற 25-ஆம் தேதியில் மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும்.தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிம... மேலும் பார்க்க

நெல்லை மாநகருக்குள் கனரக வாகனங்களுக்குக் கட்டுப்பாடு

நெல்லை மாநகரில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் இன்று முதல் கனரக வாகனங்கள் நுழைய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.நெல்லை மாநகரத்தில் கனரக வாகனங்களுக்கான தடை அத்தியாவசிய தேவையாக மக்கள் கருது... மேலும் பார்க்க

நடிகை ராதிகா தாய் கீதா காலமானார்: முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி!

சென்னை: மறைந்த நடிகர் எம்.ஆர். ராதாவின் மனைவியும் நடிகை ராதிகாவின் தாயாருமான கீதா ராதா (86) உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.அவரது உடல், இறுதி மரியாதை செலுத்துவதற்காக போயஸ் ... மேலும் பார்க்க

செப். 25ல் சென்னையில் 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' விழா!

தமிழக அரசு கல்வியில் செய்த சாதனைகள் குறித்த 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்ற கொண்டாட்ட விழா வருகிற செப். 25 ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசின் ஊடகச் செயலாளர் அமுதா ஐஏஎஸ் தகவல் தெரிவித்துள்ளார்... மேலும் பார்க்க

நெய் விலை குறைப்பு; ஆனால், தள்ளுபடி ரத்து! மற்றவை விலை குறையாதா? ஆவின் அமைதி!

ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டதை தொடர்ந்து ஆவின் நிறுவனத்தின் பால் பொருள்களின் விலை திங்கள்கிழமை குறைக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் 5%, 18% என்ற இரு அடுக்குகளில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இன்று முத... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்புக்கு பிறகும் ஆவின் விலை குறைக்கபடாதது ஏன்?

ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வந்த பிறகும் ஆவின் பொருள்களின் விலையை தமிழக அரசு குறைக்காதது குறித்து கேள்வி எழுந்துள்ளது.நாடு முழுவதும் 5%, 18% ஆகிய இரு விகித சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இன்று மு... மேலும் பார்க்க