செய்திகள் :

அசைவம் சாப்பிட்டுவிட்டு காந்தாரா படத்திற்கு வரக்கூடாதா? ரிஷப் ஷெட்டி விளக்கம்!

post image

நடிகர் ரிஷப் ஷெட்டி காந்தாரா சேப்டர் - 1 திரைப்படத்தின் போலி போஸ்டர் குறித்து பேசியுள்ளார்.

நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படமான காந்தாரா சேப்டர் 1 வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் டிரைலர் நேற்று (செப்.22) வெளியிடப்பட்டது.

டிரைலருக்கு இதுவரை அனைத்து மொழிகளிலும் சேர்த்து 7 கோடிக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன.

இந்த நிலையில், டிரைலர் வெளியிட்டு நிகழ்வில் கலந்துகொண்ட நடிகர் ரிஷப் ஷெட்டியிடம், “மது அருந்துவிட்டு, புகைபிடித்துவிட்டு, அசைவம் சாப்பிட்டுவிட்டு புனிதமான காந்தாரா சேப்டர் 1 திரைப்படத்தைக் காண வரக்கூடாது என போலி போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இது ரசிகர்களிடம் குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” எனக் கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு ரிஷப் ஷெட்டி, “உணவு என்பது அவரவர் உரிமை, விருப்பம் சார்ந்தது. அந்த போலி போஸ்டர் வெளியானபோது முதலில் எங்களுக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. ஆனால், ஒரு போலியான விஷயத்திற்கு ஏன் விளக்கமளிக்க வேண்டும் என்றே நாங்கள் எதுவும் சொல்லவில்லை. யாரோ கவனம் ஈர்க்க, வைரல் ஆக காந்தாராவைப் பயன்படுத்திக்கொண்டார்கள். இதற்கும், இப்படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ரிஷப் ஷெட்டிக்கு தமிழ் டப்பிங் செய்த பிரபல நடிகர்!

actor rishab shetty spokes about fake kantara chapter 1 poster

உலக அணி 3-ஆவது முறையாக சாம்பியன்

அமெரிக்காவில் நடைபெற்ற 8-ஆவது லேவா் கோப்பை ஆடவா் அணிகள் டென்னிஸ் போட்டியில், உலக அணி 15-9 என்ற கணக்கில் ஐரோப்பிய அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது. போட்டியின் வரலாற்றில் உலக அணிக்கு இது 3-ஆவது கோப்பையாகும... மேலும் பார்க்க

யு17 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வென்றது இந்தியா

பதினேழு வயதுக்கு உட்பட்டோருக்கான (யு17) தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் இந்தியா 3-2 கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியாவின் தலால்முவோன் காங்தே 31-ஆவது நிமிஷத்தில... மேலும் பார்க்க

பாா்சிலோனாவுக்கு 4-ஆவது வெற்றி

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில், பாா்சிலோனா 3-0 கோல் கணக்கில் கெடாஃபியை வீழ்த்தியது.இந்திய நேரப்படி, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பாா்சிலோனாவுக்காக ஃபெரான் டோரஸ்... மேலும் பார்க்க

ரிஷப் ஷெட்டிக்கு தமிழ் டப்பிங் செய்த பிரபல நடிகர்!

காந்தாரா சேப்டர் - 1 படத்தில் நடிகர் ரிஷப் ஷெட்டிக்கு தமிழ் டப்பிங் செய்த நடிகர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி எழுதி, இயக்கியிருக்கும் திரைப்படமான காந்தாரா சேப்டர் 1 வருகிற அக்டோ... மேலும் பார்க்க