செய்திகள் :

ரிஷப் பந்த்தை துரத்தும் காயம்..! மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட்டில் விளையாடுவாரா?!

post image

இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பந்த், சொந்த மண்ணில் நடைபெறும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் மேற்கிந்தியத் தீவுகள் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இந்தத் தொடர் வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி துவங்கி 14 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டு போட்டிகளும் அகமதாபாத் மற்றும் தில்லியில் நடைபெறுகிறது.

இந்தத் தொடருக்கு முன்னதாக இங்கிலாந்தில் நடைபெற்ற ‘ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி’ தொடரில் இந்திய அணி விளையாடியது.

மான்செஸ்டரில் ஜூலை மாதம் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்தபோது பந்து பலமாக காலில் பட்டதால், ரிஷப் பந்த்துக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இருப்பினும், அபாரமாக விளையாடிய ரிஷப் பந்த் 75 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்தார். இந்தப் போட்டிக்குப் பின்னர், 6 வாரங்கள் அவர் ஓய்விலிருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.

இந்த நிலையில், அவர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டியிலும் பங்கேற்கமாட்டார் எனத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவருக்குப் பதிலாக துருவ் ஜூரேல் விக்கெட் கீப்பராகப் பணியாற்றுவார் என்றும், மாற்றுவீரராக தமிழக வீரர் ஜெகதீஷன் சேர்க்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Rishabh Pant set to miss West Indies Test series!

இதையும் படிக்க... ‘இந்தியா ஏ’ கேப்டன் பொறுப்பில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் திடீர் விலகல்!

‘இந்தியா ஏ’ கேப்டன் பொறுப்பில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் திடீர் விலகல்!

ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளார்.இந்தியா ஏ மற்றும் ஆஸ்திரேலியா ஏ அணிகள் தங்களுக்குள் இரண்டு அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ப... மேலும் பார்க்க

கடைசி ஒருநாள் போட்டி: பாகிஸ்தானுக்கு ஆறுதல் வெற்றி!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் மகளிரணி ஆறுதல் வெற்றி பெற்றது.தென்னாப்பிரிக்க மகளிரணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள... மேலும் பார்க்க

உலகக் கோப்பையை வெல்வதே எங்கள் இலக்கு: இந்திய வீராங்கனை

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சவால்கள் நிறைந்திருக்கும் எனவும், எங்களது இலக்கு இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்று கொடுப்பது மட்டுமே எனவும் இந்திய வீராங்கனை ஸ்நே ராணா தெரிவித்துள்ளார்.ஐசிசி மகளிர் ஒ... மேலும் பார்க்க

இது வெறும் ஆரம்பம் மட்டுமே.... அபிஷேக் சர்மாவுக்கு அஸ்வின் பாராட்டு!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மாவை இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரி... மேலும் பார்க்க

ஓய்வு முடிவை திரும்பப் பெற்ற குயிண்டன் டி காக்! மீண்டும் தென்னாப்பிரிக்க அணியில்..!

தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரரான குயிண்டன் டி காக் தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்று மீண்டும் தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாடவுள்ளார்.தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் எங்களுக்கு இணையான போட்டியாளர் அல்ல! சூர்யகுமார் யாதவ்

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியை இனி ’ரைவல்ரி’ என அழைக்காதீர்கள் என்று இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட்டுகள் வித... மேலும் பார்க்க