செய்திகள் :

கரூர்: அரசு நிலத்தை ஆக்கிரமித்து திருமண மண்டபங்கள்; போலீஸார் பாதுகாப்புடன் இடிப்பு

post image

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மாயனூர் மதுக்கரை செல்லாண்டியம்மன் கோயில், அம்மா பூங்கா அருகில் மாயனூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கற்பகவல்லி ரகுபதி கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாகச் சுமார் 50 சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து, தென்ன மரங்கள் பராமரித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது.

முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரின் ஆக்கிரமிப்பு அகற்றம்
ஆக்கிரமிப்பு அகற்றம்

இந்நிலையில், கடந்த 2017-ல் அம்மா பூங்கா அமைக்கப்பட்டது. செல்லாண்டியம்மன் கோயில் மற்றும் அம்மா பூங்காவிற்குத் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வருகை புரிந்து வந்தனர்.

அதன் பின் கற்பகவல்லி ரகுபதி, அந்த இடத்தில் இரண்டு திருமண மண்டபங்கள் கட்டி பொதுமக்களுக்கு வாடகைக்கு விட்டு வந்தார். இதற்கிடையில், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இந்த இடத்தினை அகற்றக் கோரி, 2016-ல் நீர்வளத் துறையின் சார்பில் நோட்டீஸ் கொடுத்தனர்.

நோட்டீஸைப் பெற்றுக் கொண்ட கற்பகவல்லி ரகுபதி, மதுரை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். தொடர்ந்து வழக்கு நிலுவையிலிருந்து வந்தது. இறுதியாக, மதுரை ஹைகோர்ட் 45 நாட்களுக்குள் நீர்வளத் துறைக்குச் சொந்தமான இடத்தினை அகற்றிக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது.

அதேபோல், ஆக்கிரமிப்பாளர் தங்களது இரண்டு திருமண மண்டபங்களை மற்றும் பொருட்களை அகற்றிக் கொள்ள முன்வராதபட்சத்தில், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று சொல்லப்பட்டது.

முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரின் ஆக்கிரமிப்பு அகற்றம்
ஆக்கிரமிப்பு அகற்றம்

இந்நிலையில், நீதிமன்றம் விதித்த கெடு முடிந்து 46-வது நாளான இன்று நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் கோபி கிருஷ்ணன் தலைமையில், கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் பிரபாகரன் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் முன்னிலையில், குளித்தலை காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புடன் ஒரு பொக்லைன், இரண்டு ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் சுமார் 50 சென்டில் அமைக்கப்பட்டிருந்த இரண்டு திருமண மண்டபங்கள், சமையல் கூடம், கடைகள் அகற்றப்பட்டது.

இந்த ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றும் பணியின் போது சுமார் ரூ. 20 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம் ஏற்பட்டன. நீர்வளத் துறைக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்து திருமண மண்டபங்கள் கட்டி வாடகைக்கு விட்டு வந்த மாயனூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கற்பகவல்லி ரகுபதி தி.மு.க-வில் இருந்தவர்.

முன்னாள் ஊராட்சிமன்ற தலைவரின் ஆக்கிரமிப்பு அகற்றம்
ஆக்கிரமிப்பு அகற்றம்

தற்பொழுது கட்சி மாறி பா.ஜ.க கட்சியிலிருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஆக்கிரமித்துக் கட்டிய கட்டடத்தை அதிகாரிகள் அகற்றிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நெல்லை: காதல் மனைவியைக் கழுத்தறுத்துக் கொடூரமாகக் கொலை செய்த இளைஞர்; பகீர் வாக்குமூலம்

நெல்லை, கங்கைகொண்டான் அருகிலுள்ள ஆலடிப்பட்டியைச் சேர்ந்தவர் பிரித்திகா. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பெயிண்டரான அன்புராஜ் என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்றாலும், ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: திருமணம் மீறிய உறவு; காவல் நிலையம் முன்பு விஷமருந்தி ஜோடி தற்கொலை செய்த பரிதாபம்!

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு சாலைப்புதூரைச் சேர்ந்தவர் தங்கவேல்சாமி. கார் டிரைவரான இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். தங்கவேல்சாமி, கடந்த சில மாதங்களாக நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள உறவினரின... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: சிறுமியுடன் பழகிய இளைஞர்; ஓட ஓட விரட்டி கொன்ற சகோதரன்; பின்னணி என்ன?

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். எலக்ட்ரிஷினான இவர், தற்போது திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலை சுனாமி காலனியில் வாடகை வீட்டில் குடியிருந்து வருகிறா... மேலும் பார்க்க

BJP எம்.பி. மனைவியை ஏமாற்றிய கும்பல்; ரூ.14 லட்சம் பறிப்பு - நடந்தது என்ன?

நாடு முழுவதும் முதியவர்கள் மற்றும் பெண்களை சைபர் கிரிமினல்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்து பணத்தை பறித்து வருகின்றனர். சைபர் குற்றங்களில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்யப்பட்டுள்ளது. இதில... மேலும் பார்க்க

திருமணமான நபருடன் காதல்; உயிரிழந்த கல்லூரி மாணவி - பின்னணி என்ன ?

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்தவர் கண்மணி (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர் அதே பகுதியிலுள்ள ஒரு அரசு கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். குடும்பச் சூழல் காரணமாக, விருத்தாசலத்... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: நாடோடி சமூக பள்ளி மாணவனைத் தாக்கிய தலைமை ஆசிரியர்; இருவர் கைது; பின்னணி என்ன?

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள கீழ ஏம்பல் கிராமத்தில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் மாவீரன் எனும் சிறுவன் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். நாடோடி பழங்குடி வகுப... மேலும் பார்க்க