இந்த வார ராசிபலன் செப்டம்பர் 23 முதல் 28 வரை #VikatanPhotoCards
என்எல்சிஎன்-கே தீவிரவாத அமைப்பு மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
நாகாலாந்து தேசிய சோஷலிஸ்ட் கவுன்சில் - கப்லாங் (என்எல்சிஎன் -கே) தீவிரவாத அமைப்பு மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் தீவிரமாக செயல்படும் இந்த அமைப்பு நாகாலாந்து பிரிவினையை முக்கியக் கோரிக்கையாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் நாகாலாந்து பிராந்தியத்துக்கு மட்டுமல்லாது மியான்மரின் சில பகுதிகளுக்கும் இந்த அமைப்பு உரிமை கொண்டாடி வருகிறது. அஸ்ஸாமில் செயல்படும் உல்ஃபா தீவிரவாத அமைப்பு, மக்கள் விடுதலை ராணுவம், கங்லிபாக் மக்கள் புரட்சிகர கட்சி உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
அரசு அதிகாரிகள், தொழிலதிபா்கள் மற்றும் பொதுமக்களைக் கடத்திச் சென்று பணம் கேட்டு மிரட்டுவது, சட்டவிரோத ஆயுதக் கடத்தல், இந்தியாவுக்கு எதிரான நாடுகளுடன் கைகோத்து செயல்படுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவது இந்த அமைப்பு தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பு மட்டுமல்லாது இதனுடன் தொடா்புடைய பிற அமைப்புகள் மீதான தடையையுமை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பதாக உள்துறை அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்எஸ்சிஎன்-கே அமைப்பின் போட்டி அமைப்பான என்எஸ்சிஎன் -ஐ.எம். அமைப்பு மத்திய அரசுடன் அமைதிப் பேச்சு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.