Parthiban: "முதலில் இதுபோன்ற செய்திகள் மரணமடைய வேண்டும்" - வதந்தி குறித்துக் கொத...
இந்தியா 'ஏ' கேப்டன் பதவியிலிருந்தும், தொடரில் இருந்தும் விலகிய ஸ்ரேயஸ் ஐயர்; வெளியான தகவல் என்ன?
2025 ஆசியக் கோப்பைக்கான இந்திய டி20 அணியில் இடம்பெறாத ஸ்ரேயஸ் ஐயர், ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.
முதல் போட்டி 16 ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று(செப்.23) லக்னோவில் தொடங்கி இருக்கிறது.

போட்டி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இந்தியா 'ஏ' அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர், அணியில் இருந்து திடீரென விலகியிருக்கிறார்.
லக்னோவில் இருந்து உடனடியாக மும்பை திரும்பிய ஸ்ரேயஸ், தனது விலகலுக்கான காரணத்தை அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை.
இருப்பினும், தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியதாக பிசிசிஐயிடம் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் அணியில் இருந்து விலகியதால், முதல் போட்டியில் துணை கேப்டனாக இருந்த துருவ் ஜுரல், அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்திருக்கிறார்.

ஸ்ரேயஸ் ஐயருக்குப் பதிலாக மாற்று வீரர் யாரும் அணியில் சேர்க்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஸ்ரேயஸின் இந்த திடீர் முடிவு இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.