செய்திகள் :

Parthiban: "முதலில் இதுபோன்ற செய்திகள் மரணமடைய வேண்டும்" - வதந்தி குறித்துக் கொதிக்கும் பார்த்திபன்

post image

தமிழ் சினிமாவில் ஒரே ஆளை மட்டும் நடிக்க வைத்துப் படும் எடுப்பது, சிங்கிள் ஷாட்டில் எடுப்பது என வித்தியாசமாகத் திரைப்படங்களை எடுப்பவர் இரா. பார்த்திபன்.

30 ஆண்டுகளாக இயக்குநராகவும், நடிகராகவும் திரைத்துறையில் தனி அடையாளத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் இரா. பார்த்திபன், 54-ம் பக்கத்தில் மயிலிறகு, நான் தான் சி.எம் போன்ற படங்களைத் தனது டைரக்ஷன் லிஸ்ட்டில் வைத்திருக்கிறார்.

பார்த்திபன்
பார்த்திபன்

இவரது நடிப்பில், இட்லி கடை உள்ளிட்ட அடுத்தடுத்த படங்கள் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கின்றன.

இந்த நிலையில், இரா. பார்த்திபன் இறந்துவிட்டதாக யூடியூபில் போலி ஷார்ட்ஸ் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையறிந்த இரா. பார்த்திபன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், "இதுபோன்ற செய்திகள் மரணமடைய வேண்டும்.

இதைத் தயாரிப்பவர்கள் தங்களின் வாய்க்கரிசிக்காகச் செய்தாலும் …. மற்றவர்களின் மனதைப் பிணமாக்கி அதைக் கொத்தித் திண்ணும் கேவலப் பிறவியாக வாழ வேண்டுமா? எனச் சம்மந்தப்பட்டவர்களின் குடும்பம்>>> அது தாயோ தாரமோ பெற்றதுகளோ யோசிக்க வேண்டும்.

இது பலமுறை, என்னை மட்டுமல்ல பலரையும் இறைவனடி சேர shortest route ticket வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.

அவர்களாகவே திருந்த அந்தச் சுடுகாட்டு சுடலை சாமியோ, ஆறாவது அறிவோ உதவ வேண்டும்" என்று பதிவிட்டிருக்கிறார்.

The U1niverse Tour: சென்னை முதல் துபாய் வரை கான்சர்ட் நடத்தும் யுவன் - எப்போது தெரியுமா?

இசை நிகழ்ச்சி நடத்தும் கலாசாரங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இசைக் கலைஞர்கள் வெறும் பாடல் பாடுவதோடு நிறுத்தி விடாமல், மேடைகளில் அதனை ஒரு கலை நிகழ்ச்சியாக அரங்கேற்றுகின... மேலும் பார்க்க

`` `ரமணா' படம் கமிட்டானப்போ அனுராக் காஷ்யப்புக்கு என் சப்போர்ட் தேவைப்பட்டது, அதான்...'' - நட்டி

கோடம்பாகத்தின் பிஸியான நடிகர்களின் லிஸ்டில் முக்கிய இடத்தில் இருக்கிறார் நடிகர் நட்டி. அவர், அருண் பாண்டியனுடன் இணைந்து நடித்திருக்கும் `ரைட்' படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. இதைத் தாண்டி, 'கருப்பு... மேலும் பார்க்க

kantara: "அசைவம் சாப்பிட்டால் படம் பார்க்க வர வேண்டாமா?" - வைரலான போஸ்டர்; ரிஷப் ஷெட்டி விளக்கம்!

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் ட்ரெய்லர் இன்று (செப் 22) வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 2022-ம் ஆண்டு 'காந்தாரா' படத்திற்குக் கிடைத்த நாடுதழுவிய வரவேற்பையும்,... மேலும் பார்க்க

Kiss: "படம் வெளியான 2வது நாளிலேயே வெற்றினு சொல்லி கேக் வெட்டுகிறோமா..."- நடிகர் கவின் கலகல பதில்

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றிகரமாக வளர்ந்து வருபவர் நடிகர் கவின். தன் இயல்பான நடிப்பாலும், திரைக்கதை தேர்வாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறார்.`லிஃப்ட்' படத்தில் த... மேலும் பார்க்க