செய்திகள் :

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசாம் கான் விடுதலை!

post image

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசாம் கான் 23 மாதங்களுக்குப் பின் இன்று (செப். 23) சீதாபூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

மூத்த தலைவர் ஆசாம் கான் சீதாபூர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். கட்சித் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அவரை சிறைக்கு வெளியே வரவேற்றனர். மேலும், ஆசாம் கானின் விடுதலையையொட்டி அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் சிறைக்கு வெளியே கூடியதால், சீதாபூர் போலீஸார் ட்ரோன்கள் மூலம் அவர்களைக் கண்காணித்தனர்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆசாம் கான், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சருமாவார். இவர் கடந்த 2008ஆம் ஆண்டு சாஜ்லெட் காவல் நிலையம் அருகே சாலை மறியல் மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது தொடர்பாக அவர்மீது வழக்குப் பதியப்பட்டது.

அசாம் கான் இதற்கு முன்பு 2022 இல் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இருப்பினும், அக்டோபர் 2023 இல் அவர் மீது பதிவு செய்யப்பட்ட புதிய வழக்கைத் தொடர்ந்து, அவர் ராம்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்து சீதாபூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து ஆசாம் கானின் வழக்குரைஞர் ஜுபைர் அகமது கான் கூறுகையில்,

ஆசாம் கான் அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் பெற்றுள்ளதாகவும், சீதாபூர் மாவட்ட சிறைச்சாலையால் விடுதலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

போலீஸாரின் பதிவுகளின்படி, ஆசாம் கான் மீது 111 குற்றவியல் வழக்குகள் உள்ளன. இவற்றில், 7 வழக்குகளில் இறுதி அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, ஒரு வழக்கு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டது. மேலும் 9 வழக்குகள் சமாஜ்வாதி அரசால் திரும்பப் பெறப்பட்டன. அவருக்கு 6 வழக்குகளில் தண்டனை விதிக்கப்பட்டது, ஆனால் இப்போது அனைத்திலும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வழக்குகள் இன்னும் விசாரணையில் உள்ளன என்று அவர் கூறினார்.

Senior Samajwadi Party leader Azam Khan was released from Sitapur Jail today (Sept. 23) after 23 months.

இதையும் படிக்க: வாட்ஸ்ஆப் குழுத் தகவல்களை தவறவிடுகிறீர்களா? விரைவில் புதிய அம்சம் அறிமுகம்!

எச்1பி விசா கணவரை விவாகரத்து செய்துவிட்டு கிரீன்கார்ட் சகாவை மணக்கலாமா? வைரலாகும் பெண்ணின் பதிவு!

எச்1பி விசா வைத்திருக்கும் கணவரை விவாகரத்து செய்துவிட்டு கிரீன்கார்ட் சகாவை மணக்கலாமா? என்ற இந்திய பெண்ணின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.விசா கட்டண உயர்வு விவகாரத்தில் ஏற்பட்டுள்ள மன அழுத்தம் ம... மேலும் பார்க்க

வளர்ப்பு நாயின் நகம் பட்டு உடலில் காயம்: ரேபிஸ் தொற்றால் காவல்துறை ஆய்வாளர் உயிரிழப்பு!

வளர்ப்பு நாய்கள் நகத்தால் சீண்டினாலும் ரேபிஸ் வரலாம்; ஆகவே, எச்சரிக்கை அவசியம் என்பதை அண்மையில் குஜராத்தில் நிகழ்ந்ததொரு துயர சம்பவம் எடுத்துரைக்கிறது.குஜராத் காவல் துறையில் ஆய்வாளராக பணியாற்றிய வன்ரா... மேலும் பார்க்க

விப்ரோ நிறுவனரிடம் உதவிக் கோரும் கர்நாடக முதல்வர்!

பெங்களூரில் நிலவும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த உதவிக் கோரி, விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அஸிம் பிரேம்ஜிக்கு, கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். பெங்களூரின் வெளிவட்டச் சாலையில் நிலவும் ... மேலும் பார்க்க

ராகுலின் கேள்விக்கு தேர்தல் ஆணையம்தான் பதிலளிக்க வேண்டும்; பாஜகவினர் அல்ல! சரத் பவார்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் காந்தியின் கேள்விக்கு தேர்தல் ஆணையம்தான் பதிலளிக்க வேண்டுமே தவிர, பாஜகவினர் அல்ல என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத் பவார் தெரிவித்துள்ளார்... மேலும் பார்க்க

சமூகங்களுக்கிடையே வேறுபாடுகளைக் களைய முதல்வர் முன்வர வேண்டும்: சரத் பவார்!

மகாராஷ்டிரத்தில் நடைபெறும் இடஒதுக்கீடு மோதலுக்கு மத்தியில், பல்வேறு சமூகங்களுக்கிடையேயான பிரச்னையைத் தீர்ப்பதில் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் முன்னிலை வகிக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் ச... மேலும் பார்க்க

வெள்ளத்தில் மிதக்கும் கொல்கத்தா! மின்சாரம் பாய்ந்து 7 பேர் பலி!

கொல்கத்தாவில் திங்கள்கிழமை இரவுமுதல் விடியவிடிய பெய்த கனமழை காரணமாக மாநகரம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.துர்கா பூஜை கொண்டாட்டங்கள் தொடங்குவதற்கு சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தா... மேலும் பார்க்க