சொல்லொணாத் துயரத்துக்கு உள்ளாகியிருக்கும் மனிதநேயம்..! -ஐ.நா. தலைவர் வேதனை
தேசிய விருது பெற்றார் ஊர்வசி!
'உள்ளொழுக்கு' மலையாளத் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை நடிகை ஊர்வசி பெற்றுக்கொண்டார்.
2023 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தில்லியில் இன்று(செப். 23) நடைபெற்று வருகிறது.
'உள்ளொழுக்கு' மலையாளத் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகையாக ஊர்வசி அறிவிக்கப்பட்டிருந்தார்.
அதன்படி இன்று நடைபெறும் விழாவில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவிடம் ஊர்வசி தனது தேசிய விருதை பெற்றுக்கொண்டார்.
இவர் நடித்த 'உள்ளொழுக்கு' திரைப்படம் சிறந்த மலையாளப் படமாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோ டாமி இயக்கத்தில் நடிகைகள் ஊர்வசி, பார்வதி நடிப்பில் வெளியான 'உள்ளொழுக்கு' திரைப்படம் பெரிதும் கவனம் பெற்று ரசிகர்களிடையே மிகுந்த பாராட்டைப் பெற்றது.