சொல்லொணாத் துயரத்துக்கு உள்ளாகியிருக்கும் மனிதநேயம்..! -ஐ.நா. தலைவர் வேதனை
மகரிஷி வால்மீகி விடியோ: சர்ச்சைக்கு அக்ஷய் குமார் விளக்கம்!
நடிகர் அக்ஷய் குமார் தனது மகரிஷி வால்மீகி விடியோ போலியானது என விளக்கம் அளித்துள்ளார்.
தயவுசெய்து சரியா அல்லது போலியா என உறுதிப்படுத்திக் கொண்டு செய்திகளை வெளியிடுங்கள் என தொலைக்காட்சி, செய்தி நிறுவனங்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் (58 வயது) பயோபிக் படங்கள் நடித்து புகழ்ப்பெற்றிருக்கிறார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் மகரிஷி வால்மீகி எனும் படம் உருவாகி இருப்பதாகவும் டிரைலர் வரவிருப்பதாகவும் போஸ்டர்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின.
சில வட இந்திய தொலக்காட்சி செய்தி நிறுவனங்களும் செய்திகளை வெளியிட்டன. ஆனால், அது ஏஐ மூலம் உருவாக்கியதென அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவில் கூறியுள்ளதாவது:
ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட விடியோ ஒன்றில் நான் மகரிஷி வால்மீகியாக இருப்பதைப் பார்த்தேன்.
இந்த விடியோக்கள் எல்லாமே போலியானது. ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பதை தெளிவுப்படுத்துகிறேன்.
இது உண்மையானதா அல்லது எடிட் செய்யப்பட்டதா என்பதை சோதிக்காமலே சில செய்தி சேனல்கள் இதைச் செய்திகளாக வெளியிட்டுள்ளது மிகவும் மோசமானது.
இந்தக் காலத்தில், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட விடியோக்கள் மிகுந்த வேகமாக பரவுகின்றன. தயவுசெய்து உறுதிப்படுத்திக் கொண்டு செய்திகளை வெளியிடுங்கள் என்றார்.
ஜாலி எல்எல்பி3 படம் கடந்த செப்.19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.