"நான் ZOHO-வுக்கு மாறுகிறேன்" - பிரதமரின் `சுதேசி' வேண்டுகோளை ஏற்ற மத்திய அமைச்ச...
தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் மோகன் லால்!
சினிமாவுக்கு செய்த பணிகளைப் பாராட்டி வழங்கப்பட்ட வாழ்நாள் சாதனைக்கான தாதா சாகேப் பால்கே விருதை மலையாள நடிகர் மோகன்லால் இன்று (செப். 23) பெற்றுக்கொண்டார்.
தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி கெளரவித்தார்.
71 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்று வருகிறது. இதில், தேசிய விருதுக்குத் தேர்வான கலைஞர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு விருது வழங்கி வருகிறார்.
தேர்வான கலைஞர்கள் விருது பெற்று வரும் நிலையில், மலையாள நடிகர் மோகன்லாலுக்கு வாழ்நாள் சாதனைக்கான தாதா சாகேப் பால்கே விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.
அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த மிகுந்த நெகிழ்ச்சியுடன் மோகன்லால் விருதைப் பெற்றுக்கொண்டார்.
இதையும் படிக்க | பாரம்பரிய உடையில் தேசிய விருது பெற்ற ஜி.வி. பிரகாஷ் குமார்!