செய்திகள் :

சமாஜ்வாதி ஆட்சிக்கு வந்ததும் ஆசாம் கான் மீதான அனைத்து வழக்குகளும் திரும்பப்பெறப்படும்: அகிலேஷ்

post image

சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் ஆசாம் கான் மீதான அனைத்து பொய் வழக்குகளும் திரும்பப்பெறப்படும் என்று அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

பல்வேறு வழக்குகளில் சீதாபூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆசாம் கான் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஜாமீன் விடுவிக்கப்பட்டார்.

அவரின் விடுதலையை சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வரவேற்றுள்ளார்.

இதுதொடர்பாக அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஆசம் கான் சமாஜ்வாதி கட்சியின் நிறுவன உறுப்பினர் மட்டுமல்ல, சமாஜ்வாதி (சோசலிச) இயக்கத்திலும் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

இன்று மிகுந்த மகிழ்ச்சியின் தருணம். ஆசாம் கானுக்கு இறுதியாக நீதி கிடைத்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி ஆட்சி அமைத்தவுடன், கான் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து "பொய் வழக்குகளும்" திரும்பப் பெறப்படும் என்று முன்னாள் முதல்வர் கூறினார்.

யாருடைய பெயரையும் குறிப்பிடாமல், முதல்வர் (யோகி ஆதித்யநாத்) மாநிலத்தில் பாஜக கட்சி ஆட்சி அமைத்த பிறகு, அவர் மீதும், துணை முதல்வர் மற்றும் பிற பாஜக தலைவர்கள் மீதும் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற்றதாக யாதவ் குற்றம் சாட்டினார்.

பாஜக அரசு தனது சொந்தத் தலைவர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெற்றதுபோல, சமாஜ்வாதி கட்சி அரசின் கீழ், ஆசாம் கான் மற்றும் பிறர் மீதான பொய் வழக்குகள் வாபஸ் பெறப்படும்.

புனையப்பட்ட வழக்குகளால் குறிவைக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் கூட நிவாரணம் பெறுவார்கள் என்று யாதவ் கூறினார்.

Samajwadi Party president Akhilesh Yadav on Tuesday welcomed veteran leader Azam Khan's release from jail, and announced that all "false" cases against him will be withdrawn once the party comes to power in Uttar Pradesh.

இதையும் படிக்க: சிறந்த துணை நடிகை: தேசிய விருது பெற்றார் ஊர்வசி!

கொல்கத்தாவில் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடக்கம்! 30 விமானங்கள் ரத்து!

கொல்கத்தாவில் நீடிக்கும் கனமழையால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மாநகரின் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனிடையே, கனமழை, காற்றின் காரணமாக அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததிலும் மின்... மேலும் பார்க்க

எச்1பி விசா கணவரை விவாகரத்து செய்துவிட்டு கிரீன்கார்ட் சகாவை மணக்கலாமா? வைரலாகும் பெண்ணின் பதிவு!

எச்1பி விசா வைத்திருக்கும் கணவரை விவாகரத்து செய்துவிட்டு கிரீன்கார்ட் சகாவை மணக்கலாமா? என்ற இந்திய பெண்ணின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது.விசா கட்டண உயர்வு விவகாரத்தில் ஏற்பட்டுள்ள மன அழுத்தம் ம... மேலும் பார்க்க

வளர்ப்பு நாயின் நகம் பட்டு உடலில் காயம்: ரேபிஸ் தொற்றால் காவல்துறை ஆய்வாளர் உயிரிழப்பு!

வளர்ப்பு நாய்கள் நகத்தால் சீண்டினாலும் ரேபிஸ் வரலாம்; ஆகவே, எச்சரிக்கை அவசியம் என்பதை அண்மையில் குஜராத்தில் நிகழ்ந்ததொரு துயர சம்பவம் எடுத்துரைக்கிறது.குஜராத் காவல் துறையில் ஆய்வாளராக பணியாற்றிய வன்ரா... மேலும் பார்க்க

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசாம் கான் விடுதலை!

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ஆசாம் கான் 23 மாதங்களுக்குப் பின் இன்று (செப். 23) சீதாபூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.மூத்த தலைவர் ஆசாம் கான் சீதாபூர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். க... மேலும் பார்க்க

விப்ரோ நிறுவனரிடம் உதவிக் கோரும் கர்நாடக முதல்வர்!

பெங்களூரில் நிலவும் வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த உதவிக் கோரி, விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அஸிம் பிரேம்ஜிக்கு, கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். பெங்களூரின் வெளிவட்டச் சாலையில் நிலவும் ... மேலும் பார்க்க

ராகுலின் கேள்விக்கு தேர்தல் ஆணையம்தான் பதிலளிக்க வேண்டும்; பாஜகவினர் அல்ல! சரத் பவார்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் காந்தியின் கேள்விக்கு தேர்தல் ஆணையம்தான் பதிலளிக்க வேண்டுமே தவிர, பாஜகவினர் அல்ல என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத் பவார் தெரிவித்துள்ளார்... மேலும் பார்க்க