செய்திகள் :

உலகக் கோப்பைத் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் விலகல்!

post image

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கிரேஸ் ஹாரிஸ் காயம் காரணமாக விலகியுள்ளார்.

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. போட்டிகள் அனைத்தும் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படுகின்றன. தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி இலங்கையை எதிர்த்து விளையாடுகிறது.

இந்த நிலையில், ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரிலிருந்து ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கிரேஸ் ஹாரிஸ் காயம் காரணமாக விலகியுள்ளார்.

அண்மையில் நிறைவடைந்த இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் ஃபீல்டிங்கில் ஈடுபட்டபோது, கிரேஸ் ஹாரிஸுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயம் காரணமாக உலகக் கோப்பைத் தொடரிலிருந்து விலகியுள்ள கிரேஸ் ஹாரிஸுக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் ஹீதர் கிரஹாம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

28 வயதாகும் ஹீதர் கிரஹாம் ஆஸ்திரேலிய அணிக்காக ஒரு ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடி, 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறும் தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, நியூசிலாந்தை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Australian all-rounder Grace Harris has been ruled out of the ICC ODI World Cup due to injury.

இதையும் படிக்க: ஐசிசி ஒருநாள் தரவரிசை: தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் ஸ்மிருதி மந்தனா!

சூப்பர் 4 சுற்று: இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் பந்துவீச்சு!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்றில் அபு தாபியில்... மேலும் பார்க்க

கடந்த கால ஐசிசி தொடர்களிலிருந்து பாடம் கற்றுக் கொண்டுள்ளோம்: தென்னாப்பிரிக்க கேப்டன்

கடந்த கால ஐசிசி தொடர்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்டுள்ளதாக தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் லாரா வோல்வர்ட் தெரிவித்துள்ளார்.8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்ட... மேலும் பார்க்க

ஐசிசி ஒருநாள் தரவரிசை: தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் ஸ்மிருதி மந்தனா!

ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீராங்கனைகளுக்கான தரவரிசையை ஐசிசி இன்று (செப்டம்பர... மேலும் பார்க்க

எந்த ஒரு அணியாலும் இந்தியாவை தோற்கடிக்க முடியும்: வங்கதேச தலைமைப் பயிற்சியாளர்

எந்த ஒரு அணியாலும் இந்தியாவை தோற்கடிக்க முடியும் என வங்கதேச அணியின் தலைமைப் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் தெரிவித்துள்ளார்.ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் சுற்று நிறை... மேலும் பார்க்க

உலகக் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி சமபலத்துடன் உள்ளது: ஆஸி. கேப்டன்

இளம் மற்றும் மூத்த வீராங்கனைகள் என ஆஸ்திரேலிய அணி சமபலத்துடன் இருப்பதாக அந்த அணியின் கேப்டன் அலிஸா ஹீலி தெரிவித்துள்ளார்.ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேத... மேலும் பார்க்க

இந்திய அணி கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம்! ஹாங் காங் சிக்ஸஸ் தொடரில்..!

ஹாங் காங் சிக்ஸ் தொடரில் இந்திய அணி கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.சீனாவின் ஹாங்காங்கில் நடைபெறும் ஹாங்காங் சிக்ஸஸ் தொடர் வருகிற நவம்பர் 7 ஆம் தேதி தொடங்கி 9 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள... மேலும் பார்க்க