"நான் ZOHO-வுக்கு மாறுகிறேன்" - பிரதமரின் `சுதேசி' வேண்டுகோளை ஏற்ற மத்திய அமைச்ச...
ஐசிசி ஒருநாள் தரவரிசை: தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும் ஸ்மிருதி மந்தனா!
ஐசிசி ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீராங்கனைகளுக்கான தரவரிசையை ஐசிசி இன்று (செப்டம்பர் 23) வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா பேட்டிங்குக்கான தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அபாரமாக செயல்பட்டதன் காரணத்தினால், பேட்டிங் தரவரிசையில் அவர் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஸ்மிருதி மந்தனா இரண்டு சதங்களை விளாசி அசத்தினார். அதில் 50 பந்துகளில் விளாசிய அதிவேக சதமும் அடங்கும். அவரது கிரிக்கெட் பயணத்தில் மிகவும் அதிகமான ரேட்டிங் புள்ளிகளைப் (818 ரேட்டிங் புள்ளிகள்) பெற்று அசத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட தீப்தி சர்மா, இரண்டு இடங்கள் முன்னேறி 5-வது இடம் பிடித்துள்ளார். பந்துவீச்சு தரவரிசையில் இங்கிலாந்தின் சோஃபி எக்கல்ஸ்டோன் 795 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஆஷ் கார்டனர் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய அணியின் ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா 4-வது இடத்தில் உள்ளார்.
India's vice-captain Smriti Mandhana continues to remain at the top of the ICC ODI rankings.
இதையும் படிக்க: எந்த ஒரு அணியாலும் இந்தியாவை தோற்கடிக்க முடியும்: வங்கதேச தலைமைப் பயிற்சியாளர்