சொல்லொணாத் துயரத்துக்கு உள்ளாகியிருக்கும் மனிதநேயம்..! -ஐ.நா. தலைவர் வேதனை
பாரம்பரிய உடையில் தேசிய விருது பெற்ற ஜி.வி. பிரகாஷ் குமார்!
வாத்தி படத்திற்காக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தேசிய விருது பெற்றார்.
தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் விருதை பெற்றுக்கொண்டார்.
வாத்தி படத்தில் பாடல்கள் அமைத்ததற்காக சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் ஜி.வி. பிரகாஷ் குமார் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
100 படங்களுக்கு மேல் இசையமைத்த பிறகு, தற்போது தனது முதல் தேசிய விருதை அவர் பெற்றுள்ளார்.
71 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்று வருகிறது. இதில், வாத்தி பட பாடல்களுக்காக சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் ஜி.வி. பிரகாஷுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

தமிழர் பாரம்பரிய முறைப்படி வேட்டி அணிந்தவாறு மேடையில் தோன்றி தேசிய விருதை பெற்றுக்கொண்டார்.
தெலுங்கு பட இயக்குநர் வெங்கி அட்லுரி இயக்கிய வாத்தி திரைப்படத்தில் தனுஷ் - சம்யுக்தா நடித்திருந்தனர்.
இதையும் படிக்க | தேசிய விருது பெற்ற பார்க்கிங் பட இயக்குநர், தயாரிப்பாளர்!