பாகிஸ்தானை எங்களுக்கான போட்டியாகவே கருத முடியாது: சூா்யகுமாா் யாதவ்
kantara: "அசைவம் சாப்பிட்டால் படம் பார்க்க வர வேண்டாமா?" - வைரலான போஸ்டர்; ரிஷப் ஷெட்டி விளக்கம்!
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள ‘காந்தாரா சாப்டர் 1’ படத்தின் ட்ரெய்லர் இன்று (செப் 22) வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
2022-ம் ஆண்டு 'காந்தாரா' படத்திற்குக் கிடைத்த நாடுதழுவிய வரவேற்பையும், வசூலையும் அள்ளியது. இப்போது முந்தையப் படத்தைவிடவும் ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'காந்தாரா சாப்டர் 1’ படம் பெரிய பட்ஜெட்டில், பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் 2ம் தேதி திரைக்கு வரும் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் எகிறியிருக்கின்றன.

இன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வைரலாகிய அதேசமயம், இப்படம் தொடர்பாக போஸ்டர் ஒன்றும் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
அந்தப் போஸ்டரில், "காந்தாரா படத்தைப் பார்க்க வேண்டுமென்றால் இந்த மூன்று விதிமுறைகளை பின்பற்றவும். 1. மது அருந்தக் கூடாது, 2. புகைப்பிடிக்கக் கூடாது, 3. அசைவ உணவை சாப்பிட்டு வந்து பார்க்கக் கூடாது" என்று காந்தாரா படக்குழு அறிவித்தது போல போலியான போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் பல்வேறு எதிர்ப்புகளும், சர்ச்சைகளும் சமூகவலைதளங்களில் வெடித்தன.
யாரோ போலியாக உருவாக்கிய போஸ்டர்
இந்நிலையில் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்ப, அதற்குப் பதிலளித்திருக்கும் படத்தின் இயக்குநரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி, "உணவு என்பது அவரவர் விருப்பம் சார்ந்தது. அதில் விதிமுறைகள் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. அது யாரோ போலியாக உருவாக்கிய போஸ்டர்.
எங்கள் கவனத்திற்கு அது வந்தபோது எங்களுக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. படத்தின் பிரபல்யத்துக்கு இடையே தங்களை விளம்பரப்படுத்த நினைக்கும் சிலரின் வேலைதான் இது. இதற்கும் இப்படத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை." என்று விளக்கமளித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...