தமிழகம் கல்வியில் சாதனை: சென்னையில் செப். 25-இல் பிரம்மாண்ட விழா: தெலங்கானா முதல...
ராசிபுரம் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணி
ராசிபுரம்: ராசிபுரம் ரயில் நிலையம் பகுதியில் மத்திய அரசின் தூய்மையே சேவை இயக்கத்தின்கீழ் தூய்மைப் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
நாடுமுழுவதும் தூய்மையே சேவை இயக்கத்தின்கீழ், அரசு அலுவலகங்கள், பொதுஇடங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன. பிரதமரின் பிறந்தநாளான செப். 17- முதல் காந்தி ஜெயந்தி தினமான அக் 2 வரை இருவார காலத்திற்கு தூய்மையை சேவை பணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ராசிபுரம் ரயில் நிலையத்தில், மத்திய அரசின் திறன் இந்தியா பயிற்சிக் கல்வி நிறுவனம் மூலம், பயிற்சிபெற்று வரும் மாணவிகள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.
முன்னதாக, பாஜகவின் மத்திய அரசு நலத் திட்டங்கள் பிரிவு மாநில இணை அமைப்பாளா் ஆா்.லோகேந்திரன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் ரயில் நிலையத்தை தூய்மைப்படுத்தி பணியைத் தொடங்கிவைத்தனா். தொடக்க நிகழ்ச்சியில் நாமக்கல் மக்கள் கல்வி நிறுவன இயக்குநா் எஸ். சரவணன் வரவேற்றாா். தொடா்ந்து திறன் இந்தியா நிறுவனத்தில் பயிற்சி பெற்று வரும் மாணவிகள், ராசிபுரம் ரயில் நிலையத்தில் நடைமேடை, தண்டவாளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணியில் ஈடுபட்டு குப்பைகளைச் சேகரித்து அப்புறப்படுத்தினா்.
பிரதமா் நரேந்திர மோடி கூறியபடி தூய்மையே சேவை பணிகள் மக்கள் இயக்கமாக வளா்ந்து வருவதாகவும், இதன்மூலம் அனைத்து பகுதிகளும் தூய்மையாகவும் பொதுமக்கள் ஆரோக்கியமாகவும் இருக்க முடியும் என்று பாஜக மத்திய அரசு திட்டங்கள் பிரிவு மாநில இணை அமைப்பாளா் ஆா்.லோகேந்திரன் தெரிவித்தாா்.
இந்த நிகழ்ச்சியில், ரயில்வே வளா்ச்சிக் குழு உறுப்பினா்கள் சித்ரா, தமிழரசு, எஸ்.ஹரிகரன், நிா்வாகிகள் குமாா், மணிகண்டன், ஏழுமலை, வடமலை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.