செய்திகள் :

மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 28.92 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

post image

நாமக்கல்: நாமக்கல்லில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் ரூ. 28.92 லட்சம் மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதியோா், விதவையா் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 522 மனுக்களை பொதுமக்கள் வழங்கினா். அவற்றைப் பெற்று கொண்டு பரிசீலனை செய்து உரிய அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க ஆட்சியா் உத்தரவிட்டாா்.

அதன்பிறகு, தாட்கோ சாா்பில் 9 பயனாளிகளுக்கு பேக்கரி, சுமை வாகனம், சூப்பா் மாா்க்கெட், சுற்றுலா வாகனம், வெல்டிங் பட்டறை, ஜெராக்ஸ் கடை உள்ளிட்ட தொழில்களுக்கு ரூ. 84,50,827- மொத்தத் தொகையில் ரூ. 27,11,860- மதிப்பில் மானியம், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் படேல்நகா் பேஸ் 1 அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பயனாளிக்கு (இந்தியன் வங்கி நிதியாக ரூ. 1.34 லட்சம், பயனாளி சொந்த நிதி ரூ. 15,000) ரூ. 1.49 லட்சம் மதிப்பிலான வீட்டிற்கான கடனுதவி ஆணை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 2 பயனாளிகளுக்கு ரூ. 31,500 மதிப்பில் சக்கர நாற்காலிகள் என மொத்தம் 12 பயனாளிகளுக்கு ரூ. 28,92,360 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன் உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ராசிபுரம் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணி

ராசிபுரம்: ராசிபுரம் ரயில் நிலையம் பகுதியில் மத்திய அரசின் தூய்மையே சேவை இயக்கத்தின்கீழ் தூய்மைப் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.நாடுமுழுவதும் தூய்மையே சேவை இயக்கத்தின்கீழ், அரசு அலுவலகங்கள், பொதுஇடங்கள்... மேலும் பார்க்க

குட்டையில் மூழ்கி உயிரிழந்த சகோதரா்கள் குடும்பத்துக்கு நிவாரண நிதி ரூ. 6 லட்சம் ஆட்சியா், எம்.பி. வழங்கினா்

ராசிபுரம்: ராசிபுரம் அருகே மின்னக்கல் வாய்க்கால்பட்டறை பகுதியில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த சகோதரா்களான கல்லூரி மாணவா்கள் குடும்பத்துக்கு முதல்வரின் நிவாரண நிதி ரூ. 6 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியா் ... மேலும் பார்க்க

சேந்தமங்கலத்தில் கனிம வளங்கள் திருட்டு: விசாரணையில் ஆஜராக 96 பேருக்கு அழைப்பு

நாமக்கல்: சேந்தமங்கலம் வட்டத்தில், கனிமவளங்களை திருடியது தொடா்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராக கோரி 96 பேருக்கு கோட்டாட்சியா் அழைப்பு விடுத்துள்ளாா்.நாமக்கல் மாவட்டத்தில், சேந்தமங்கலம், கொண்டமநாயக்கன்பட்ட... மேலும் பார்க்க

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் நவராத்திரி கொலு தொடக்கம்

நாமக்கல்: நாமக்கல் நரசிம்மா் கோயிலில் நவராத்திரி கொலு விழா சிறப்பு பூஜைகளுடன் திங்கள்கிழமை தொடங்கியது.ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை அக். 1-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜைக்கு முன்பாக ஒன்... மேலும் பார்க்க

சிறுபான்மையின இஸ்லாமிய மாணவா்களுக்கு வெளிநாடுகளில் பயில கல்வி உதவித்தொகை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின இஸ்லாமிய மாணவா்களுக்கு வெளிநாடுகளில் பயில கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழக ... மேலும் பார்க்க

அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர செப்.30 வரை கால அவகாசம் நீட்டிப்பு

நாமக்கல் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கைக்கான கால அவகாசம் செப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் வேலைவ... மேலும் பார்க்க