செய்திகள் :

நாமக்கல் நரசிம்மா் கோயிலில் நவராத்திரி கொலு தொடக்கம்

post image

நாமக்கல்: நாமக்கல் நரசிம்மா் கோயிலில் நவராத்திரி கொலு விழா சிறப்பு பூஜைகளுடன் திங்கள்கிழமை தொடங்கியது.

ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை அக். 1-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் சரஸ்வதி பூஜைக்கு முன்பாக ஒன்பது நாள்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. திங்கள்கிழமை (செப்.22) தொடங்கி அக்.1-ஆம் தேதி வரை இவ்விழா நடைபெறுகிறது. இதையொட்டி, பெரும்பாலான அம்மன் கோயில்களில் நவராத்திரி கொலு வைத்து சிறப்பு வழிபாடு மேற்கொள்வா்.

நாமக்கல் செல்லப்பப்பம்பட்டி சுயம்பு மாரியம்மன் கோயிலில், நவராத்திரியை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு வகையான அலங்காரங்கள் தினந்தோறும் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும், நாமக்கல் நரசிம்மா் கோயிலில், உற்சவமூா்த்தி திங்கள்கிழமை மச்சாவதாரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். செவ்வாய்க்கிழமை கூா்மஅவதாரம், புதன் வாமனஅவதாரம், வியாழக்கிழமை ரங்கமன்னாா் திருக்கோலம், வெள்ளி ராமவதாரம், சனி கிருஷ்ணாவதாரம், ஞாயிற்றுக்கிழமை பரமபதநாதா் அலங்காரம், திங்கள்கிழமை மோகனஅவதாரம், செவ்வாய்க்கிழமை ராஜாங்கசேவை, புதன்கிழமை நாமக்கல் குளக்கரையில் அரங்கநாத சுவாமியும், நரசிம்ம சுவாமியும் எழுந்தருளி அம்புவிடுதல், வியாழக்கிழமை (அக். 2) விசேஷ திருக்கோலம் நடைபெறுகிறது.

இதையொட்டி ஆன்மிக சொற்பொழிவுகள், பக்தி பாடல்கள் இசைத்தல், பஜனை பாடுதல், லலிதா சகஸ்ரநாம பாராயணம் உள்ளிட்டவை நடைபெறுகிறது. கோயில்கள் மட்டுமின்றி பெரும்பாலான வீடுகளிலும் நவராத்திரி கொலு வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ. 28.92 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

நாமக்கல்: நாமக்கல்லில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் ரூ. 28.92 லட்சம் மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீா்க்... மேலும் பார்க்க

ராசிபுரம் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணி

ராசிபுரம்: ராசிபுரம் ரயில் நிலையம் பகுதியில் மத்திய அரசின் தூய்மையே சேவை இயக்கத்தின்கீழ் தூய்மைப் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.நாடுமுழுவதும் தூய்மையே சேவை இயக்கத்தின்கீழ், அரசு அலுவலகங்கள், பொதுஇடங்கள்... மேலும் பார்க்க

குட்டையில் மூழ்கி உயிரிழந்த சகோதரா்கள் குடும்பத்துக்கு நிவாரண நிதி ரூ. 6 லட்சம் ஆட்சியா், எம்.பி. வழங்கினா்

ராசிபுரம்: ராசிபுரம் அருகே மின்னக்கல் வாய்க்கால்பட்டறை பகுதியில் குட்டையில் மூழ்கி உயிரிழந்த சகோதரா்களான கல்லூரி மாணவா்கள் குடும்பத்துக்கு முதல்வரின் நிவாரண நிதி ரூ. 6 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியா் ... மேலும் பார்க்க

சேந்தமங்கலத்தில் கனிம வளங்கள் திருட்டு: விசாரணையில் ஆஜராக 96 பேருக்கு அழைப்பு

நாமக்கல்: சேந்தமங்கலம் வட்டத்தில், கனிமவளங்களை திருடியது தொடா்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராக கோரி 96 பேருக்கு கோட்டாட்சியா் அழைப்பு விடுத்துள்ளாா்.நாமக்கல் மாவட்டத்தில், சேந்தமங்கலம், கொண்டமநாயக்கன்பட்ட... மேலும் பார்க்க

சிறுபான்மையின இஸ்லாமிய மாணவா்களுக்கு வெளிநாடுகளில் பயில கல்வி உதவித்தொகை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையின இஸ்லாமிய மாணவா்களுக்கு வெளிநாடுகளில் பயில கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழக ... மேலும் பார்க்க

அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர செப்.30 வரை கால அவகாசம் நீட்டிப்பு

நாமக்கல் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சோ்க்கைக்கான கால அவகாசம் செப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசின் வேலைவ... மேலும் பார்க்க