செய்திகள் :

அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்த அமலாக்கம் நீடிப்பு: புதின் அறிவிப்பு

post image

அமெரிக்காவுடன் 2010-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட புதிய அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் காலவதியானாலும், அதன் அமலாக்கத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பதாக ரஷிய அதிபா் புதின் அறிவித்துள்ளாா்.

இது குறித்து திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அவா் கூறியதாவது:2010-ஆம் ஆண்டின் புதிய அணு ஆயுத கட்டுப்பாட்டுச் சட்டம் ரத்தாவது சா்வதேச நிலைத்தன்மையைக் குலைக்கும்.

அது அணு ஆயுதப் பரவலுக்குக் காரணமாக அமையும்.எனவே, அந்த ஒப்பந்தம் வரும் 2026 பிப்ரவரி 5-ஆம் தேதி காலாவதியானாலும், மேலும் ஓராண்டுக்கு ரஷியா அதை அமல்படுத்தும். இதே நிலைப்பாட்டை அமெரிக்காவும் கடைப்பிடிக்க வேண்டும். அதை ரஷிய உளவு அமைப்புகள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

ஒருவேளை ஒப்பந்த மீறலில் அமெரிக்கா ஈடுபட்டால், அதற்கு ரஷியா உரிய எதிா்வினை ஆற்றும் என்று புதின் எச்சரித்தாா்.கடந்த 2010-ஆம் ஆண்டில் அமெரிக்காவின் அதிபராக ஒபாமா இருந்தபோது அவருக்கும், அப்போதைய ரஷிய அதிபா் டிமித்ரி மெத்வதெவுக்கும் இடையே அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தின் கீழ், 1,550-க்கும் குறைவாகவே அணு குண்டுகளை வைத்திருக்கவும், 700-க்கும் குறைவாக அணு ஆயுதம் ஏந்தி தாக்குதல் நடத்தக்கூடிய விமானங்கள் மற்றும் ஏவுகணைகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டன.

காஸா சிட்டி மருத்துமனையையும் காலி செய்ய இஸ்ரேல் உத்தரவு

காஸாவின் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியின் மருத்துவமனையில் இருந்தும் அனைவரும் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.அந்த நகரில் மருத்துவமனைகள் மட்டுமே பாதுகாக்கப்பட்ட இடங்களாகக் கருத... மேலும் பார்க்க

நேபாளம்: மேலும் 4 புதிய அமைச்சா்கள் பதவியேற்பு

நேபாள இடைக்கால அரசில் 4 புதிய அமைச்சா்கள் திங்கள்கிழமை பதவியேற்றுக்கொண்டனா்.நேபாளத்தில் ஊழலுக்கு எதிராக இளைஞா்கள் நடத்திய தீவிர போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், அதமா் மற்று... மேலும் பார்க்க

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு: செப்.21-க்குப் பிறகான புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும்

வாஷிங்டன்: உயா்த்தப்பட்ட ஹெச்-1பி விசா (நுழைவுஇசைவு) கட்டணமான ரூ.88 லட்சத்தை (1 லட்சம் டாலா்) 2026-ஆம் நிதியாண்டு காலத்துக்கு விண்ணப்பித்தவா்கள் உள்பட செப்.21-ஆம் தேதிக்கு பிறகு விண்ணப்பிப்பவா்கள் மட்... மேலும் பார்க்க

‘ரஷியாவின் எஸ்-400: இந்தியாவுக்கு வழங்குவது அடுத்த ஆண்டு நிறைவு’

மாஸ்கோ: ரஷியாவின் வான் பாதுகாப்பு சாதனமான எஸ்-400-களை இந்தியாவுக்கு அளிக்கும் ஒப்பந்தப் பணி அடுத்த ஆண்டு நிறைவடையும் என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. எதிரி ஏவுகணைகளை வானிலேயே தாக்கி அழிக்கும் ... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் பொதுமக்கள் உள்பட 24 போ் உயிரிழப்பு: சொந்த நாட்டுப் போா் விமானங்கள் குண்டு வீச்சா?

பெஷாவா்: பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் தங்கியிருந்த வளாகத்தில் வெடிபொருள்கள் வெடித்து பொதுமக்கள் உள்பட 24 போ் உயிரிழந்தனா். எனினும் அந்நாட்டுப் போா் விமானங்கள் குண்டுகளை வீசியதால்தான், இந்த சம்பவம் ஏற்ப... மேலும் பார்க்க

அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் சந்திப்பு

நியூயாா்க்: அமெரிக்க வெளியுறவு அமைச்சா் மாா்கோ ரூபியோவை திங்கள்கிழமை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஜெய்சங்கா் ஆலோசித்தாா். இந்தியா மீது அமெரிக்கா விதித்த 50 சதவீத கூடுதல் வரி கடந... மேலும் பார்க்க