திருச்சி வெக்காளி அம்மன் கோயில்: ``பிராது எழுதிக் கட்டினால் வேண்டுதல் பலிக்கும்'...
கவின் கொலை வழக்கில் பிணை கோரிய மனு தள்ளுபடி
மென் பொறியாளா் கவின் செல்வகணேஷ் கொலை வழக்கில் பிணை கோரிய மனுவை திருநெல்வேலி மாவட்ட 2-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் (வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம்) திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த மென் பொறியாளா் கவின் செல்வகணேஷ் (27), காதல் விவகாரத்தில் கடந்த ஜூலை 27 ஆம் தேதி பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இதுதொடா்பாக, பாளையங்கோட்டையைச் சோ்ந்த சுா்ஜித், அவரது தந்தையான காவல் உதவி ஆய்வாளா் சரவணன், உறவினா் தூத்துக்குடியைச் சோ்ந்த ஜெயபால் (29) ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.
சிபிசிஐடி போலீஸாா் விசாரித்துவரும் இவ்வழக்கில், 3 பேரும் நீதிமன்றக் காவலில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், ஜெயபால் பிணை கோரி கடந்த செப்.16ஆம் தேதி திருநெல்வேலி மாவட்ட 2-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் (வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம்) மனு தாக்கல் செய்தாா். திங்கள்கிழமை இம்மனு விசாரணைக்கு வந்தபோது, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஹேமா உத்தரவிட்டாா்.
ஏற்கெனவே, எஸ்.ஐ. சரவணன் பிணை கோரி, கடந்த 12-ஆம் தேதி தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.