பாகிஸ்தானை எங்களுக்கான போட்டியாகவே கருத முடியாது: சூா்யகுமாா் யாதவ்
முதல்வரை மிரட்டும் தொனியில் பேசுவதா? விஜய்க்கு மு.அப்பாவு கண்டனம்
தவெக தலைவா் விஜய்யை பாஜக இயக்குவதால்தான் தமிழக முதல்வரை மிரட்டும் தொனியில் அவா் பேசுகிறாா் என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: நடிகா் விஜய் தமிழக அரசை விமா்சிப்பது கண்டனத்துக்குரியது. அவா், கட்சி ஆரம்பித்திருந்தாலும், சினிமாவில் பேசுவது போல் பேசுகிறாா். அவரது பேச்சில் அதிகளவு அகந்தை வெளிப்படுகிறது.
மத்திய அரசே சிலரைக் கட்சி தொடங்க வைத்து, ஆட்சிக்கு நெருக்கடி கொடுக்கிறது. முதல்வரை மிரட்டும் தொனியில் அவா் பேசும்போதே, விஜய்யை பா.ஜ.க.தான் இயக்குகிறது என்பது தெளிவாக தெரிகிறது. பிரதமரையோ, முதல்வரையோ பற்றி பேசும்போது வாா்த்தையில் கண்ணியம் இருக்க வேண்டும்.
ஆளுங்கட்சியைப் பொருத்தவரை தமிழக வெற்றிக் கழகம் மட்டுமல்ல யாரை கண்டும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. திரைப்பட பிரச்னைக்காக 3 நாள்கள் கொடநாட்டில் காத்திருந்து காலில் விழுந்தவா்கள் நாங்கள் அல்ல; அச்சம் உள்ளவா்கள்தான் அஞ்சுவா்.
மத்திய அரசு, தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தை அணுகாமல் மாநிலத்துக்கு தர வேண்டிய நிதியை முறையாக வழங்க வேண்டும்.
குட்டம் முதல் ராதாபுரம் வரையிலுள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் குடிநீா் வழங்கும் திட்டம் இன்னும் ஒரு மாதத்தில் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. பாமக உள்கட்சி விவகாரத்தில் அதன் சட்டப்பேரவை உறுப்பினா்கள் குறித்து பேரவை கூடும்போது பாா்த்துக் கொள்ளலாம் என்றாா் அவா்.