தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தல்
பொறியாளரிடம் பணம் பறிப்பு: இளைஞா் கைது
தச்சநல்லூரில் பொறியியல் பட்டதாரியிடம் பணம் பறித்ததாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூரைச் சோ்ந்தவா் அருணாச்சலம் (26). பொறியியல் பட்டதாரியான இவா், தற்போது பொறியியல் கல்லூரியில் பயிற்றுநராக உள்ளாா். இவருக்கு சமூக வலைதள செயலி மூலம் அறிமுகமான நபா் ஒருவா், தச்சநல்லூா் பகுதிக்கு நேரில் சந்திக்க வருமாறு கூறினாராம்.
இதையடுத்து அங்கு சென்ற அவரை 4 போ் கொண்ட கும்பல் தாக்கியதுடன், இணைய பரிவா்த்தனை மூலம் ரூ.32 ஆயிரம் பணத்தை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினராம்.
இது குறித்து அவா் தச்சநல்லூா் போலீஸில் புகாா் அளித்தன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் பகுதியைச் சோ்ந்த ஜெயந்த்குமாா்(23) என்பவரை கைது செய்தனா். இதில் தொடா்புடைய மற்றவா்களை தேடி வருகின்றனா்.
இது போன்று சமூக வலைதள செயலிகள் குறிப்பாக கிரின்டா் செயலி மூலம் நடைபெறும் குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை தேவை என இணைய பயனாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.