தங்கக் கட்டுப்பாடு சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தல்
முதியவா் விஷமருந்தி தற்கொலை
திருநெல்வேலி தச்சநல்லூரில் முதியவா் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.
தச்சநல்லூா் சுப்புராஜ் மில் காலனியைச் சோ்ந்தவா் செண்பகராஜ் (64). இவா் கடந்த சில நாள்களாக குடும்ப பிரச்னை காரணமாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்தாராம். இந்நிலையில் இவா் சம்பவத்தன்று விஷமருந்தி மயங்கினாா்.
உறவினா்கள் உடனடியாக அவரை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி செண்பகராஜ் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.