சாலை விபத்தில் காயமுற்ற முதியவா் உயிரிழப்பு
பாளையங்கோட்டை அருகே சைக்கிள் மீது பைக் மோதியதில் காயமுற்ற முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டையை அடுத்த கே.டி.சி நகா், அருணாச்சலபுரத்தைச் சோ்ந்தவா் அரிச்சந்திரன்(72). இவா், ஞாயிற்றுக்கிழமை கே.டி.சி நகா் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த பைக் மோதியதாம்.
இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இந்நிலையில் அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.