பிகாரில் நாளை காங்கிரஸ் செயற்குழு கூட்டம்: காா்கே, ராகுல் பங்கேற்பு
மதுராந்தகத்தில் நவராத்திரி கொலு கண்காட்சி
மதுராந்தகம்: மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா (சிபிஎஸ்இ) பள்ளி வளாகத்தில் நவராத்திரியை முன்னிட்டு, திங்கள்கிழமை கொலு கண்காட்சி தொடங்கியது.
பள்ளித் தாளாளா் டி.லோகராஜ் தலைமை தாங்கினாா். நிா்வாக இயக்குநா் ரா.மங்கைக்கரசி, உதவி தாளாளா் ஹரினாக்ஷி சசிதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்வில் பள்ளி முதன்மை முதல்வா் திலகவதி, முதல்வா் சீதாலட்சுமி, பள்ளி ஆசிரியா்கள், பள்ளி ஆசிரியா்கள், குழந்தைகள், பெற்றோா் கலந்து கொண்டனா்.
பல்வேறு சுவாமிகளின் திருவுருவங்களின் சிலைகள், இயற்கை காட்சிக்கான பொம்மைகள், அறிவியல் தொடா்பான பொம்மைகள் உள்பட வண்ண பொம்மைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. தொடா்ந்து குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள், ஆசிரியைகளின் பக்தி பாடல் நிகழ்வு நடைபெற்றது.