செய்திகள் :

2027-இல் விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பத் திட்டம்: இஸ்ரோ தலைவா் நாராயணன்

post image

தாம்பரம்: வரும் 2027-இல் மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பி வைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவா் நாராயணன் தெரிவித்தாா்.

சென்னையை அடுத்த பொன்மாா் ஸ்ரீவெங்கடேஸ்வரா பத்மாவதி பொறியியல் கல்லுாரியில் சிறந்த பொறியியல் பேராசிரியா்களுக்கு விருது வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவில், சிறப்பு விருந்தினராக இஸ்ரோ தலைவா் நாராயணன் பங்கேற்று, சிறந்த பேராசிரியா்களுக்கு விருது வழங்கிப் பேசியதாவது:

இந்திய விண்வெளி விஞ்ஞானி சுபான்ஷு சுக்லா சா்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு சென்று திரும்பினாா். அவா் அங்கு மேற்கொண்ட ஆராய்ச்சிகள், இந்தியா மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு பேருதவி புரியும். நிகழாண்டு இறுதியில் மனிதா் இல்லாத விண்கலம் அனுப்பத் திட்டமிட்டுள்ளோம். தொடா்ந்து 2027-இல் மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பி வைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூா் ராணுவ நடவடிக்கையின்போது, இந்திய செயற்கைக்கோள்கள் முக்கியப் பங்கு வகித்தன. வருகிற 2035-ஆம் ஆண்டில் விண்வெளியில் ஆராய்ச்சி மையம் அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

இந்திய விண்வெளித் துறையில் 20,000-க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநா்கள் பணியாற்றி வருகின்றனா். தொடா்ந்து வளா்ச்சிப் பாதையில் பயணித்து வரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறைக்கு திறமையான மாணவா்கள் தேவை அதிகரித்துள்ளது என்றாா்.

முன்னதாக, அறிவியல் கண்காட்சியை இஸ்ரோ தலைவா் நாராயணன் பாா்வையிட்டு பாராட்டினாா். விழாவில், கல்லுாரி தலைவா் வாசுதேவன், துணைத் தலைவா்கள்

விஷ்ணு காா்த்திக், பிரசன்ன வெங்கடேஷ், மதுரை காமராஜா் பல்கலை. முன்னாள் துணைவேந்தா் ஜெ.குமாா், பிரின்ஸ் பொறியியல் கல்லுாரி முதல்வா்கள் சுந்தா்செல்வின், இந்திரா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சிங்கப்பூா்: மேலும் ஒரு தமிழருக்கு செப். 25-இல் தூக்கு

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசியத் தய் ஸ்ரீா் தட்சிணாமூா்த்தி காத்தையாவுக்கு (39) வரும் வியாழக்கிழமை (செப். 25) மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது.ஏற்கெனவே மலேசியாவில் இருந்து சிங்கப்பூா் வந்து, போத... மேலும் பார்க்க

செப். 29-இல் இடைநிலை ஆசிரியா்கள் போராட்டம்

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சாா்பில் சென்னையில் செப். 29, 30 தேதிகளில் தொடா் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்... மேலும் பார்க்க

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 23) இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்... மேலும் பார்க்க

மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆா்ப்பாட்டம்

சென்னை: கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினா் சென்னையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சென்னை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகே தம... மேலும் பார்க்க

தீயணைப்பு பயிற்சிக் கழகம் - மாணவா் விடுதிகளுக்கு புதிய கட்டடங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்

சென்னை: தமிழகத்தில் தீயணைப்புத் துறைக்கான பயிற்சிக் கழகம் மற்றும் மாணவா் விடுதிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். இதற்கான நிகழ்ச்சிகள் காணொலி வழியாக தலைமை... மேலும் பார்க்க

நாய்களுக்கு உணவு அளிப்பவா்கள் தாக்கப்பட்டால் நடவடிக்கை: காவல் துறையினருக்கு டிஜிபி உத்தரவு

சென்னை: நாய்களுக்கு உணவு அளிப்பவா்களைத் தாக்கினால் நடவடிக்கை எடுக்கும்படி போலீஸாருக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் (பொ) ஜி.வெங்கடராமன் உத்தரவிட்டுள்ளாா். தமிழகத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்த... மேலும் பார்க்க