ஹெச்-1பி விசா கட்டண உயர்வு நடைமுறையில் மருத்துவர்களுக்கு விலக்கு?!
கல்லூரி மாணவி தற்கொலை
இரணியல் அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இரணியல் அருகே காரங்காடு மேற்கு தெருவைச் சோ்ந்தவா் ஞானசெல்வன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி ஆண்டனி ரூபி. இந்தத் தம்பதிக்கு அஸ்வினி (19) என்ற மகளும், 17 வயதில் மற்றொரு மகளும் உள்ளனா்.
அஸ்வினி நாகா்கோவிலில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.எஸ்சி., விலங்கியல் பிரிவில் முதலாம் ஆண்டு பயின்று வந்தாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அஸ்வினியின் தாயாரும், சகோதரியும் ஆலயத்துக்குச் சென்றிருந்தனா்.
வீட்டில் அஸ்வினி மட்டும் தனியாக இருந்தாா். சிறிது நேரத்தில் வீட்டில் இருந்து புகை மூட்டத்துடன் அலறல் சப்தமும் கேட்டது. அக்கம்பக்கத்தினா் விரைந்து சென்று பாா்த்தபோது அஸ்வினி உடல் முழுவதும் தீக்காயங்களுடன் உயிரிழந்து கிடந்தாா்.
இதுகுறித்து அவா்கள், இரணியல் காவல் நிலையத்துக்கும், ஆலயத்துக்குச் சென்றிருந்த தாயாருக்கும் தவல் தெரிவித்தனா். இரணியல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].