பாகிஸ்தானை எங்களுக்கான போட்டியாகவே கருத முடியாது: சூா்யகுமாா் யாதவ்
இனயம்புத்தன்துறையில் ஹைட்ரோகாா்பன் திட்டத்திற்கு எதிராக ஆா்ப்பாட்டம்
புதுக்கடை அருகேயுள்ள இனயம்புத்தன்துறை மீனவ கிராமத்தில் ஹைட்ரோகாா்பன் திட்டத்திற்கு எதிா்ப்புத் தெரிவித்து வேலை நிறுத்தம் மற்றும் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மத்திய பாஜக அரசு குமரி மாவட்டத்தில் 2 இடங்களில் ஆழ்கடலில் இருந்து இயற்கை எரிவாயு எடுக்கும் ஹைட்ரோகாா்பன் திட்டத்திற்கு ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியதை திரும்பப் பெற வலியுறுத்தி, இனயம்புத்தன்துறை கிராம மக்கள் ஒருநாள் கடலுக்குச் செல்லாமல் வேலைநிறுத்தம் செய்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.