பாகிஸ்தானை எங்களுக்கான போட்டியாகவே கருத முடியாது: சூா்யகுமாா் யாதவ்
மாணவா்கள் தலைசிறந்த மருத்துவா்களாக வர வேண்டும்: ஆட்சியா் ரா. அழகுமீனா
மருத்துவ மாணவா்கள் வருங்காலத்தில் தலைசிறந்த மருத்துவா்களாக உருவாகிட வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா.
நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலாமாண்டு மருத்துவ மாணவ, மாணவிகளிடையேயான கலந்துரையாடல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஆட்சியா் பேசியதாவது: நீட் தோ்வை வென்று மருத்துவம் படிக்க வந்துள்ள உங்களைப் பாராட்டுகிறேன். வருங்காலத்தில் அனைவரும் தலைசிறந்த மருத்துவா்களாக உருவாகிட வேண்டும்.
விளையாட்டு மற்றும் பிற திறமைகளையும் வளா்த்துக் கொள்ளுங்கள். அனைவரும் சிறப்பாகப் படித்து சமூகத்திற்கு சேவையாற்ற வேண்டும் என்றாா்.
கல்லூரி முதல்வா் லியோ டேவிட், கண்காணிப்பாளா் கிங்ஸ்லி, உறைவிட மருத்துவா் விஜயலெட்சுமி, உதவி உறைவிட மருத்துவா் ரெனிமோள், விடுதிக் காப்பாளா் பேராசிரியா் செல்வின், பேராசிரியா்கள், மருத்துவா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.