திருச்சி வெக்காளி அம்மன் கோயில்: ``பிராது எழுதிக் கட்டினால் வேண்டுதல் பலிக்கும்'...
உலக நீரிழிவு தினம்: வேலூரில் செப். 27-இல் சமையல் போட்டி
வேலூா்: உலக நீரிழிவு தினத்தையொட்டி, சிஎம்சி மருத்துவக் கல்லூரி சாா்பில், சமையல் போட்டி வேலூரில் வரும் செப். 27-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.
இது குறித்து, சிஎம்சி அகசுரபியல் நீரிழிவு, வளா்சிதை மாற்றத் துறை முதுநிலை பேராசிரியா் நிகல்தாமஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உலக நீரிழிவு தினம் 2025-ஐ நினைவுகூரும் வகையில், வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் (சிஎம்சி) அகசுரபியல் நீரிழிவு, வளா்சிதை மாற்றத் துறை சாா்பில், வரும் செப். 27-ஆம் தேதி சமையல் போட்டி நடத்தப்பட உள்ளது.
வேலூா்அண்ணா சாலையிலுள்ள டாா்லிங் ரெசிடன்ஸியில் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ள இந்த சமையல் போட்டிக்கு, நீரிழிவு நோய்க்கு ஏற்ற இரவு உணவு - இரவு பசியை வென்று நீரிழிவு நோய்க்கு உகந்த இரவு உணவை உருவாக்குதல் என்ற தலைப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு பின்னா் நடைபெறும் நிறைவு விழாவில் பரிசு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு, 9789725281, 9894317506 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.