Amit Shah: ``மோடியிடம் பிடித்த குணம், விடுமுறை எடுக்காதவர், வரலாறு காணாத பிரதமர்...
ரூ.21.85 கோடியில் மாநில தீயணைப்பு பயிற்சி மையம்: காணொலி மூலம் முதல்வா் அடிக்கல்
செங்கல்பட்டு: திருப்போரூா் அருகே ரூ.21.85 கோடியில் மாநில தீயணைப்பு பயிற்சி மையம் கட்டுவதற்காக காணொலி மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்.
திருப்போரூா் பேரூராட்சி, காலவாக்கம் கிராமத்தில், 12.85 ஏக்கா் பரப்பளவு இடத்தின் ஒரு பகுதியில் தீயணைப்பு நிலையம் செயல்படுகிறது. அதே வளாகத்தில், மாநில தீயணைப்பு பயிற்சி மையம் அமைக்கப்படுகிறது. இப்பயிற்சி மையத்துக்கு முதல்வா் அடிக்கல் நாட்டினாா்.
இதனையொட்டி, பயிற்சி மைய வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தீயணைப்புத்துறை இணை இயக்குநா் சத்தியநாராயணன், மாவட்ட அலுவலா் லட்சுமி நாராயணன், உதவி மாவட்ட அலுவலா் செந்தில் குமரன், காலவாக்கம் தீயணைப்பு நிலைய அலுவலா் துரைராஜ், வீரராகவன் உள்ளிட்டோா் பங்கேற்று, கல்வெட்டை திறந்து வைத்து இனிப்பு வழங்கினா்.
இங்கு அலுவலகம், விடுதி, சமையல் அறை, மாதிரி தீயணைப்பு நிலையம் என ஏற்படுத்தப்பட்டு 300 போ் பயிற்சி பெறும் அளவில் மையம் உருவாகிறது.